Cinema Journalist Union
செய்திகள் தமிழ் செய்திகள்

‘லிங்கா’ திரைப்பட கதை விவகாரம் – உண்மை ஒருநாள் வெல்லும்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் , KS ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘லிங்கா . இந்த திரைப்படத்தை ராக்லைன் புரொடக்சன்ஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரித்திருந்தார்.

லிங்கா படத்தின் கதை, தனது முல்லை வனம் 999 படத்தின் கதை என்றும், எனது கதையைத் திருடி ‘லிங்கா’ படத்தை தயாரித்துள்ளனர். அதனால், ‘லிங்கா’ படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ரவிரத்தினம் வழக்கு தொடர்ந்திருந்தார் .
இதன் காரணமாக லிங்கா திரைப்படத்தை வெளியிட தடை ஏற்பட்டது, இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் ராக்லைன் புரொடக்சன்ஸ் நிறுவனம் வழக்குத் தொடர்ந்திருந்தது. மதுரை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் ‘லிங்கா’ கதை உரிமம் தொடர்பான வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்றது. ரூ.10 கோடி காப்புத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு லிங்கா திரைப்படத்தை வெளியிடலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்து வழக்கு தொடர்பில் தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு ராக்லைன் புரொடக்சன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக வெளியாகியுள்ளது .
இது தொடர்பில் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன் போது இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாவது:
“சமீபத்தில் எங்களுக்கு நற்செய்தி கிடைத்தது. லிங்கா படத்தின் போது ஒருவர் இந்தக்கதை என்னுடையது என்று வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கின் தீர்ப்பு தற்போது எமக்கு சாதகமாக வந்துள்ளது. பத்திரிகையாளர்களை தற்போது எதற்காக சந்திக்கிறோம் என்றால் கதைத் திருட்டு தொடர்பில் அன்றைக்கு ஊடகங்கள் நிறைய எழுதி இருந்தார்கள். அதனால் தான் இந்த நல்ல செய்தியும் ஊடகங்களில் வர வேண்டும் என்று இந்த சந்திப்பை ஏற்பாடுசெய்துள்ளோம்.
ரஜினி சாரின் பிறந்த நாள் அன்று படத்தைக் படத்தைக் வெளியிட வேண்டும் என்று உழைத்தோம். அந்த நேரத்தில் இந்த வழக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது. நான் ஒரு கதையை சொல்லும் போது அது சரியாக பதிவு செய்திருக்கிறதா என்று பார்த்து தான் செய்வேன்.
பட வெளியீட்டுக்கு முதல் நாள் நீதிமன்றம் பத்துக்கோடி கட்ட வேண்டும் என்று கட்டளையிட்டது. ஒரு நாளைக்குள் பத்து கோடியை திரட்டுவதற்கு மிகவும் சிரமப்பட்டோம்.
நீதிமன்றம் எதிர் தரப்பில் தாக்கல் செய்த எல்லா சாட்சியங்களையும் விசாரித்த பின் எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது.
ரைட்டர் யூனியனுக்கு இன்னும் அதிகாரம் இருக்க வேண்டும். கதைத் திருட்டு சம்பந்தப்பட்ட வழப இப்படி ஒரு சாதகமான தீர்ப்பு வந்தது எங்களுக்குத் தான் என்று நினைக்கிறேன். கதையை முதலில் ரிஜிஸ்டர் செய்யுங்கள். அதன்பிறகு ரைட்டர் யூனியன் இருக்கிறது அங்கு செல்லுங்கள்” என்று பேசினார் .

ராக்லைன் வெங்கடேஷ் பேசியதாவது,
திரைபட வெளியீட்டுக்க முதல் நாள் 10 கோடி கட்டவேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது. படத்தை தயாரிப்பதற்கு ஏற்பட்ட கஷ்டத்தை விடவும் ஒரு நாளில் 10 கோடி திரட்டுவது பெரிய கஷ்டமாக இருந்தது. எப்படியோ சமாளித்தோம். ஒருவேளை அந்த படம் அந்த சந்தர்ப்பத்தில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் என்னாவாகும். அந்த நேரத்தில் இப்படி வந்து மிரட்டவது சரியல்ல.
அந்த நேரத்தில் ரஜினி சார் எனக்கு மிக உதவி செய்தார். உண்மை ஒருநாள் வெல்லும் என்று எங்கள் படத்தில் வரும் பாடல் மாதிரி உண்மை தான் வென்றது.
சினிமா துரைக்கு இது போன்ற பிரச்சினைகள் இனி வரக்கூடாது. இந்தப்பிரச்சனை இனி வராமல் இருக்க ரைட்டர் யூனியன் டைரக்டர் எதாவது ஒருவழி செய்ய வேண்டும்.
தற்போது தவறை செய்தவர்களுக்கு தெரிந்து விட்டது தாம் செய்தது பிழை என்று. அதனால் அவர்கள் மேல் நான் வழக்கு எதுவும் போடப்போவதில்லை. நானும் ரஜினி சாரை பின்பற்றுபவன் தான். இனி இப்படி நடக்கக்கூடாது என்று ஊடகங்கள் மூலமாக கேட்டுக்கொள்கிறேன் ” என்றார்

Related posts

2ம் பாகம்: ராஷ்மிகாவை தூக்கிவீசிய மாஜி காதலன்

Jai Chandran

Press Release – Dhanusu Raasi Neyargalae

CCCinema

மாஸ்டர் -வாத்தி கம்மிங்

Jai Chandran

Leave a Comment