Cinema Journalist Union
சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் மரணம் !

கொரோனா காலகட்டத்தில் தமிழ்த்திரையுலகம் தொடர்த்து சில பல திடீர் உயிர் இழப்புகளை சந்தித்துவருகிறது. நடிகர் விவேக் மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத திரையுலகம் தயாரிப்பாளர்கள் பாபுராஜா (சூப்பர் குட் பாபு) , மோகன் (நடிகர் அருண்விஜய்யின் மாமனார்) , இயக்குனர்கள் கௌவரி சங்கர் (மறைந்த நடிகர் குமரி முத்துவின் மருமகன்) தாமிரா உள்ளிட்ட சிலரைத் தொடர்ந்து அடுத்ததாக ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கே.வி. ஆனந்தை இன்று, இழந்திருக்கிறது.

கல்கி , விகடன் உள்ளிட்ட பத்திரிகைகளில் புகைப்படக்கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய கே.வி. ஆனந்த் (வயது-54) , சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்து பின்னர் இயக்குநர் ஆனவர். பிரித்வி ராஜ், ஶ்ரீகாந்த் நடிக்க ‘கனா கண்டேன்’ எனும் படத்தை முதன்முதலாக இயக்கியவர் அதன் பிறகு தொடர்ந்து ‘அயன்’, ‘மாற்றான்’, ‘காப்பான்’ எனப் பல படங்களை நடிகர் சூர்யாவை ஹீரோவாக வைத்து இயக்கினார். கோ , அனேகன் , கவண் உள்ளிட்ட படங்களையும் இயக்கியவர். வஸந்தின் நேருக்கு நேர் ஷங்கர் இயக்கத்தில் முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் சிறந்த ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர்

கொரோனாவோ வேறு எந்த நோய் அறிகுறிகளும் இல்லாத நிலையில் கே.வி.ஆனந்துக்கு நேற்று நள்ளிரவில் திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரே தனது காரை ஓட்டிக்கொண்டு தன் வீட்டருகே உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் போய் அட்மிட் ஆகியிருக்கிறார். ஆனால், அவரது உயிரை யாராலும் காப்பாற்றமுடியவில்லை. இன்று (30-04-2021) வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் அவர் மாரடைப்பால் மரணித்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது!

தற்போது மருத்துவமனையில் இருக்கும் அவரது உடல் குடும்பத்தினரிடம் சற்று நேரத்தில் ஒப்படைக்கப்படும் என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்திருக்கிறது.

Related posts

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களுக்கு புத்தாண்டு பரிசு

CCCinema

தெலுங்கில் நான் நடித்த ‘மகா நடிகை’ப்ளாக்பஸ்டர் ஹிட்! தமிழில் அந்த ஹிட்டை ஓடிடி தளத்தில் ஜூன் 19 ரிலீஸ் ஆகும்  ‘பென்குயின்’ படம் நிச்சயம் தரும். – நடிகை கீர்த்தி சுரேஷ் நம்பிக்கை!!

CCCinema

சூப்பர்ஸ்டார் ரஜினி பங்கு பெறும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி

CCCinema

Leave a Comment