Cinema Journalist Union
அரசியல் செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும், ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் வாழ்த்து !

தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும், ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அதன்,
தலைவர் -D.R.பாலேஷ்வர்., செயலாளர்- R.S.கார்த்திகேயன் மற்றும்
நிர்வாகிகள் , செயற்குழு உறுப்பினர்கள் & உறுப்பினர்கள். வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு ;

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைக்கான தேர்தலில் பெரும் வெற்றி பெற்று
தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் பெருவெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் 65 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளது.

குறிப்பாக , தனது 52 ஆண்டுகால உழைப்பால்., இளைஞர் அணி தலைவர் , சட்டமன்ற உறுப்பினர் , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் , எதிர்கட்சித்தலைவர், தி.மு.க. பொருளாளர் , செயல் தலைவர் , தலைவர் , எதிர் கட்சித்தலைவர் , இன்று தமிழக முதல்வர்… என படிப்படியாக உயர்ந்துள்ள மாண்புமிகு மு.க. ஸ்டாலினுக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ தனது மகிழ்ச்சிகரமான வாழ்த்தினை மீண்டும் ஒருமுறை தெரிவித்து கொள்கிறது. என சினிமா பத்திரிகையாளர் சங்கம், வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நடிகர் ஜெய் நடிப்பில் “பிரேக்கிங் நியூஸ்” விரைவில் திரையில் !

CCCinema

அடுத்தடுத்து மூன்று படம்.. அதிரடியாக களமிறங்கும் பதம் குமார், தீபன் பூபதி!

CCCinema

கொரோனாவுக்கு ஸ்பெயின் இளவரசி பலி

Jai Chandran

Leave a Comment