Cinema Journalist Union
அரசியல் செய்திகள் தமிழ் செய்திகள்

சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் , பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வஸந்த் இருவருக்கும் ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் வாழ்த்து !

சட்டமன்ற உறுப்பினராகியிருக்கும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் , பாராளுமன்ற உறுப்பினராகியிருக்கும் நடிகர் விஜய் வஸந்த் இருவருக்கும் ”சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அதன், தலைவர் -D.R.பாலேஷ்வர்., செயலாளர்- R.S.கார்த்திகேயன் மற்றும்
நிர்வாகிகள் , செயற்குழு உறுப்பினர்கள் & உறுப்பினர்கள். வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு ;

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைக்கான தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், போட்டியிட்ட முதல் முறையிலேயே பெரும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி உள்ளார் அவருக்கு நமது 65 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ தனது வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறது.

அதே போன்று ., நடிகரும் , திரைப்பட தயாரிப்பாளரும், பெரும் தொழில் அதிபருமான விஜய் வஸந்த் போட்டியிட்ட முதல் முறையிலேயே பாராளுமன்ற உறுப்பினராக கன்னியாகுமரி தொகுதியில் இருந்து தேர்வாகி உள்ளார். அவருக்கும் 65 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ தனது வாழ்த்தினை இத்தருணத்தில் தெரிவித்து கொள்கிறது. என சினிமா பத்திரிகையாளர் சங்கம், வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் கலைப்புலி எஸ். தாணு

CCCinema

LIVE KUBUDO SESSIONS ON WOMEN SAFETY ORGANISED AT VELAMMAL

CCCinema

போனா போகுதுன்னு விட்டிருந்தேன் ; ‘ஞானச்செருக்கு’ விழாவில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்

CCCinema

Leave a Comment