Cinema Journalist Union
சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வரின் குரலுக்கு உடனடியாக செவிசாய்த்து., ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கி, செயலிலும்… இறங்கிய நடிகர் சிவக்குமாரின் குடும்பம் !

மருத்துவத்திற்காக அல்லல் படும் மக்களின் அவல நிலையை பார்க்க பிடிக்காத சூர்யா , கார்த்தியின் பெருந்தன்மை !!

தமிழ்நாட்டில் கொரானோ 2வது அலை பேரிடரை சமாளிக்க முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர், பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும், நன்கொடை – செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

முதல்வரின் குரலுக்கு உடனடியாக செவிசாய்த்து செயலிலும் இறங்கியிருக்கிறது சூர்யா , கார்த்தி , ஜோதிகா… உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களை உள்ளடக்கிய நடிகர் சிவக்குமாரின் குடும்பம் .

யெஸ் ., இன்று மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகர் சிவகுமார், அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் சந்தித்து தங்களது குடும்பம் சார்பாக 1 கோடி ரூபாயை நிதியாக வழங்கியுள்ளார்கள். அப்போது தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியனும் உடனிருந்தார்.

தமிழ் சினிமா பிரபலங்களில் சிவகுமார் குடும்பத்தினர் முதன் முதலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நிதியுதவி அளித்துள்ளனர். அவர்களைப் போலவே மேலும் , பல சினிமா நடிகர் , நடிகைகள், படத்தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் … என இன்னும் பலரும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து இந்த கொரானோ பேரிடரிலிருந்து தமிழக மக்களைக் காக்க உதவி புரிந்து பிறருக்கு முன்னோடிகளாக திகழ்வார்கள்… என எதிர்பார்க்கலாம் !

Related posts

குறுகிய காலத்தில் தன் திறமையால் வளர்ந்து வரும் இளம் நடிகை மீனாட்சிகோவிந்தராஜன்

CCCinema

விமல் மற்றும் குட்டிப்புலி சரவண சக்தி இணையும் புதிய படம் ! பூஜையுடன் துவங்கியது !!

CCCinema

சத்தமில்லாமல் வறுமைக்கு உடப்பட்ட குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கிய விஷால்

CCCinema

Leave a Comment