Cinema Journalist Union
விமர்சனம்

சீறு (பட விமர்சனம்

banner

படம்:சீறு
நடிப்பு: ஜீவா, வருண், நவ்தீப், காயத்ரி கிருஷ்ணா, சாந்தினி
தயாரிப்பு: வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கணேஷ்
இசை: டி.இமான்
ஒளிப்பதிவு: பிரசன்னா எஸ்.குமார்
டைரக்‌ஷன்: ரத்ன சிவா
ஜீவா தனது கர்ப்பிணி தங்கை மீது பாசமாக இருக்கிறார். மாயவரத்தில் லோக்கல் கேபிள் டிவி சேனல் நடத்தும் ஜீவா ஊர் எம்எல்ஏவின் மதுபான கடையால் மக்களுக்கு ஏற்படும்  பாதிப்புபற்றி செய்தி ஒளிப்பரப்புகிறார். இதனால் ஜீவாவை பழிதீர்க்க எண்ணும் எம்எல்ஏ, வியாசர்பாடி ரவுடி வருணை சென்னைக்கு வரவழைக்கிறார். வருண் தன்னை கொல்லவருவதை தெரிந்து கொள்ளும் ஜீவா அவரை வழியிலேயே மடக்கி தாக்க செல்கிறார். இதற்கிடையில் ஜீவாவின் கர்ப்பிணி தங்கை பிரசவ வலியால் துடிக்கிறார். அவரது வீட்டுக்கு வரும் ரவுடி வருண் ஜீவாவின் தங்கையை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு செல்கிறார். கொலைசெய்யும் எண்ணத்துடன் வந்த வருண் தன் தங்கையை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு சென்றதை அறிந்து இன்ப அதிர்ச்சி அடைகிறார் ஜீவா. உயிரையே வைத்திருக்கும் தங்கையை காப்பாற்றிய வருணுக்கு போன் செய்து தானே நேரில் வருகிறேன் என்னை கொன்றுவிடு என்று ஜீவா வலியச் சென்று பலியாக துடிக்கிறார். இதற்கிடையில் கண்விழிக்கும் தங்கை தன்னை காப்பாற்றியவரை வீட்டுக்கு அழைத்து வா விருந்துவைக்க வேண்டும் என்கிறார். வருணை தேடி சென்னை புறப்படுகிறார் ஜீவா. அங்கு காணும் காட்சியில் அதிர்கிறார். குற்றுயிரும் கொலையுயிருமாக வருண் கிடக்க அவரை காப்பாற்றுகிறார். வருணை இந்த கதிக்க ஆளாக்கியவர்களை பழிவாங்க புறப்படும் ஜீவாவுக்கு மற்றொரு சவால் காத்திருக்கிறது அது என்ன? அவரால் அப்பிரச்னைக்கு தீர்வு காண முடிந்ததா என்பதற்கு படம்  பதில் சொல்கிறது.

ஆக்‌ஷன் கதையில் ஜீவா நடித்து நீண்ட நாள் ஆகிவிட்டதால் இதில் அவருக்கு ஆக்‌ஷன் தீனி அதிகமாகவே பரிமாறப்பட்டிருக்கிறது. சண்டை காட்சிகளில் துவம்சம் செய்கிறார். படத்தின் முதல் பாதி படுவேமாக முடிந்துவிடுகிறது. ஆனால் காரம் இல்லை. பிற்பகுதி கதைக்கு லீட்  கொடுக்கும் காட்சி தவிர மற்றபடி முற்பகுதி கதையில் வேறு சுவாரஸ்யம் எதுவும் இல்லை. பிற்பகுதியில் ஒன்றுக்கு இரண்டு கதை சொல்லியிருக்கிறார்கள். வருணை கொல்ல முயன்றவர்களை தேடுவது, அடுத்து சாதனை செய்ய துடிக்கும் மாணவிகளை கிரிமினல்வழக்கறிஞர் நவ்தீப் கடத்தி கொல்வதை தடுக்கும் கதை என ஓய்வு எல்லாமல் ஜீவாவை  ஓடவிட்டிருக்கிறார் இயக்குனர் ரத்ன சிவா. நட்புக்காகவும் பாசத்துக்காகவும் உயிர் கொடுக்க துணியும் ஜீவா சென்டிமென்ட் டச் செய்கிறார். l
திடீரென்று வக்கிலுக்கு  படிக்கப்போகிறேன் என்று  கிளம்பும் மாணவிகளின் எபிசோட் இடைசெருகலாக இருந்தாலும் கதையின் ஓட்டத்துக்கு பயன்பட்டிருக்கிறது.
ரவுடிகளின் மிரட்டலை கண்டு பயப்படும் பெண்களுக்கு ஜீவா பஞ்ச் டயலாக் பேசி தைரியமூட்டுவதும் பின்னர் அவர்களுக்கான சபதத்தை நிறைவேற்ற உதவி செய்வதுமாக நடித்து பிகில் பட காட்சியையும், விஜயையும் ஞாகப்படுத்துகிறார் நடிகர் ஜீவா.
வியாசர்பாடி ரவுடியாக வரும் வருண் என்ட்ரி காட்சியில் தடலடியாக களமிறங்குகிறார். போனில் பேசியே மறுமுனையில் பேசுபவனின் குணத்தை, தைரியமானவனா? துணிச்சல்காரனா என கண்டுபிடிப்பேன் என்று வருண் கூறுவதில் லாஜிக் இல்லாவிட்டாலும் வருண் ஒரு ரவுடி என்று சொல்லும் பில்டப் காட்சியாக இருக்கிறது. பில்டப் பண்ணும் அளவுக்கு நடித்திருக்கிறாரா என்றால் அதற்கு வாய்ப்பு இல்லை. இடைவேளைக்கு பிறகு முக்கால்வாசிநேரம் மருத்துமனையில், ஆடாமல் அசையாமல் சக்கர நாற்காலி யில் அமர்திருக்கிறார். டி.இமான் இசை என்ற பிராண்ட் படத்துக்கு பிளஸ்.

நவதீப் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் தலைகாட்டியிருக் கிறார்.  வில்லத்தனத்துக்கும் கெட்டப்புக்கும் சம்பந்தம் இல்லை.
வக்கீல் ஆகி நாட்டை திருத்தப்போகிறேன் என்று துணிச்சல் பேட்டி தரும் அந்த பெண் அடிபட்டு சாவது வேதனை.  உடன் நடித்திருக்கும் பெண்கள் உரம்.

சீறு -நட்பு.

Three Star Rating Illustration Vector

banner

Related posts

தாராள பிரபு (பட விமர்சனம் )

Jai Chandran

தர்பார் (பட விமர்சனம்)

CCCinema

டாணா (பட விமர்சனம்)

CCCinema

Leave a Comment