Cinema Journalist Union
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கொரோனா ஒழிப்பு: நாளை ஊரடங்குக்கு கமல் ஆதரவு

banner

இரண்டு வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை..

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அனைத்து நடிகர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. பல நட்சத்திரங்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். அந்த வரிசையில் உலகநாயகன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று வீடியோவில் கொரோனா வைரஸ் விழிப் புணர்வுபற்றி குழந்தைகளுக்கு  சொல்வதுபோல் பேசி புரிய வைத்திருக்கி றார். அவரது பேச்சு முழுவிவரம் இதோ:
வணக்கம், கொரோனா வைரஸ் பாதிப்பு நான்காவது, ஐந்தாவது வாரத்தில் பன்மடங்கு அதிகமா வதாக பல நாடுகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எதனால்? வைரஸ் தொற்று அறிகுறிகள் வெளியே தெரியாதபோது பாதிக்கப்பட்டவர்கள் சிலர் பல இடங்களுக்கு போய்க்கொண் டிருப்பார்கள். பாதிக்கப்பட்டது 5 பேர் என்றால் அந்த ஐந்து பேரிடமிருந்து 25 பேருக்கு பரவும் இன்னும் 100 பேருக்கு பரவாமல் தடுக்க ஒரேயொரு வழிதான் இருக்கிறது சோசியல் டிஸ்டன்சிங் அதாவது விலகி யிருத்தல்.

அதீத விழிப்புணர்வு கட்டமான 4வது வாரத்தில் தமிழ்நாடு இப்போது இருக்கிறது. கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்துவிடுங்கள். அத்தியா வசிய தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியில் செல்லுங்கள்.  இப்படியெல்லாம் செய்வதன் மூலமாக வைரஸ் உங்களுக்கு பரவாமலும் உங்களிடமிருந்து உங்கள் நெருக்கமானவர்களுக்கு பரவாமலும் தடுக்கலாம்.

கொரோனா தொற்று இருந் தாலே உயிருக்கு ஆபத்து என்பது கிடையாது ஆனால் வெகு சிலருக்கு அவர்கள் உடல் நிலையை பொறுத்து அது ஆபத்தானதாக மாறலாம். அதனால்தான் எல்லோரிடமி ருந்தும் விலகி இருத்தல் அவசியம்.
வீட்டில் இருங்கள், குடும்பத் தோடு நேரத்தை செலவழியுங்கள் மனசுக்கு பிடித்தவர்களிடம் போனில் தினமும் பேசுங்கள். ஆனால் வாங்க எல்லோரும் மீட் செய்யலாம் என்று கூப்பிட்டால் போய் விடாதீர்கள் ப்ளீஸ். அவர்களால் நமக்கோ, நம்மால் அவருக்கோ எதுவும் பாதிப்பு ஏற்படாமல் பொறுப்பாக இருக்க வேண்டும்.
வந்தால் செய்ய வேண்டியதை வரும்முன்பே செய்வோம். விலகி இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். நமக்கு ஒன்றும் வராது என்ற கண்மூடித்தன மான நம்பிக்கையினாலோ அசட்டு தைரியத்தாலோ இந்த நோய் பரவ நாம் காரணமாக இருக்கக்கூடாது. முன்னெச்சரிக் கைதான் முக்கியமான விஷயம். மறந்துவிடாதீர்கள்.
என்னய்யா இது வீட்ல இருக்க சொல்கிறீர்கள். வருமானத் துக்கு என்ன பண்றது. மார்ச் ஏப்ரல் பசங்க ஸ்கூல் பீஸ் கட்டணுமே, ஆண்டு கட்டணம் கட்ட வேண்டுமே என்று ஏகப்பட்ட குழப்பங்கள். நாளைக்கு வருமானம் வருமா? கடையெல் லாம் அடைச்சிருமே.. என்று நிறைய கேள்விகள் இருந்தாலும் இதெல்லாமே செய்ய நீங்கள் உடல்நலத்தோடு இருப்பது அவசியம். அதனால்தான் இந்த 2 வாரம் மிக முக்கியமானது.
வேலை என்னவாகும், தொழில் என்ன வாகும், பசங்க படிப்பு என்னவாகும் என்ற உங்கள் நியாயமான பயங்களை சற்று ஒதுக்கி வைத்து இந்த 2 வாரத்தை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பதை பாருங்கள். இதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி. வேலை தொழில் என்று எப்பவுமே ஓடிக்கொண்டிருந்த ஆளாக நீங்கள் இருந்திருந்தால் உங்கள் குடும்பத்தோடு நேரத்தை செலவிடலாம். இத்தனை வருடம் நீங்கள் தெரிந்துகொண்ட விஷயங்களை உங்கள் குழந்தையிடம் சொல்லுங்கள். நீங்கள் படிக்க நினைத்த புத்தகத்தை படியுங்கள். மிஸ் பண்ண படம், கற்றுக்கொள்ள நினைத்த இசை, டைம் இல்லை என்று நீங்கள் தள்ளிப்போட்ட அந்த போன்கால்ஸ் இப்ப பேசுங்க. வீட்டில் இருக்கும் பெரியவர் களிடம் நேரத்தை செலவிடுங்கள், குழந்தைகளை ஆன்லைன் கோர்ஸில் சேர்த்து விடுங்கள் புது விஷயத்தை அவர்கள் கற்றுக்கொள்ளட்டும். அவசர கால சமையல் எப்படி என்பதை இப்போது சொல்லிக் கொடுங்கள்.
எந்திரமாக ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையில் காலத்தின் கட்டாயத்தால் ஒரு சின்ன இடைவெளி கிடைத்திருக் கிறது. அதை சரியாக பயன்படுத்துங்கள். வீட்டிலேயே இருங்கள். பத்திரமாக இருங்கள்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று படித்தை வழக்கத்துக்கு கொண்டு வரும் நேரம் இது.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
#Actor Kamal haasan Talks About Coronavirus

banner

Related posts

ACTOR VIMAL AND DIRECTOR SARAVANA SAKTHI TEAM UP MIK PRODUCTION NO:1

CCCinema

அதர்வா முரளியின் புதிய படத்தில் இணையும் நடிகை லாவண்யா திரிபாதி !

CCCinema

சினிமாவை காப்பாற்ற., சினிமா தொழிலாளர்கள் குடும்பத்தோடு முதலில் சினிமா பார்க்க வேண்டும் ! – ‘சியான்கள்’ கரிகாலன் யோசனை !!

CCCinema

Leave a Comment