Cinema Journalist Union
சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

ஜோதிகாவின் “பொன்மகள் வந்தாள்” மே 29 அமேசானில் ரிலீஸ்!

banner

கொரானா வைரஸ் ஏற்படுத்திய கொடூர பாதிப்பால் ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 60 நாட்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. வீட்டில் அடைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஒரே பொழுதுபோக்கு சின்னத்திரைகளில் ஒளிபரப்பாகும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் தான். படப்பிடிப்பு நடத்த வாய்ப்பு இல்லாத காரணத்தால் தொலைக்காட்சிகளில் ஏற்கனவே ஒளிபரப்பிய படங்கள் தொடர்கள் நிகழ்ச்சிகளையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புகிறார்கள்.

இது ஒரு பக்கமிருக்க, பல கோடிகள் முதலீடு செய்து எடுக்கப்பட்ட நேரடி படங்களை ரிலீஸ் செய்ய முடியாத காரணத்தால் தயாரிப்பாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத சூழ்நிலையில் தங்கள் திரைப்படங்களை ஓ.டி.டி. பிளாட்பார்ம் எனப்படும் நேரடியாக டிஜிட்டலில் ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா நடித்த “பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிடுவதற்கு அதன் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு ஒப்பந்தம் செய்திருந்தார். இந்த செய்தி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

இது தவறான முன்னுதாரணம் என்றும் “பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் ரிலீஸ் செய்யப்பட்டால் சூர்யா குடும்பத்தினர் நடிக்கும் தயாரிக்கும் எந்த படத்தையும் இனி தியேட்டர்களில் திரையிட மாட்டோம்” என்று அறிவித்தனர். இதை தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்தினருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமேசான் நிறுவனம், வருகிற 29ம் தேதி “பொன்மகள் வந்தாள்”நேரடியாக டிஜிட்டலில் ரிலீஸ் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

இந்தியில் அமிதாப்பச்சன் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் உருவாகியிருக்கும் “குலாபோ சிட்டாபோ” என்ற படம் ஜூன் 12ஆம் தேதி வெளியாவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் மலையாளம் தமிழ் என இரு மொழிகளில் நடித்திருக்கும் “பெண்குயின்” படம் ஜூன் 19ம் தேதி வெளியாகிறது. கன்னடத்தில் பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் தயாரிப்பில் ராகினி சந்திரன் நடித்திருக்கும் “லா” என்ற படம் ஜூன் 26ம் தேதி ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல கன்னட இயக்குனர் பன்னக பரானா இயக்கத்தில் தனிஷ்சைத் நடித்திருக்கும் “பிரஞ்ச் பிரியாணி” என்ற படம் ஜூலை 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் இந்தியில் பிரபல நடிகை வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் “சகுந்தலாதேவி” மலையாளத்தில் ஜெயசூரியா அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில் உருவாகியிருக்கும் “சூபியும் சுஜாதாயும்” ஆகிய படங்களும் அமேசானில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

தொடர்ந்து பல படங்கள் இதேபோல அமேசான் நெட்பிளிக்ஸ் ஹாட்ஸ்டார் போன்ற டிஜிட்டல் திரைகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்த்தாலும் கால மாற்றத்தையும் டிஜிட்டல் புரட்சியையும் யாராலும் தடுக்க முடியாது என்று தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர்.

வெளிநாடுகளில் உருவாக்கப்படும் படங்கள் ஒரே நாளில் திரையரங்குகள் தொலைக்காட்சிகள் இணையத்தளங்களில் நேரடியாக வெளியிடப்படுகின்றன. ரசிகர்கள் தங்கள் வசதிக்கேற்ப தங்கள் ரசனைக்கேற்ப படம் பார்க்கும் முறையை தேர்ந்தெடுக்கின்றனர். எதிர்காலத்தில் அதே ரிலீஸ் நடைமுறை உலகம் முழுவதும் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என்பதே காலம் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம்.

banner

Related posts

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களுக்கு புத்தாண்டு பரிசு

CCCinema

தனித்தனி வீட்டில் வாழும் கமல், ஸ்ருதி, அக்‌ஷரா

Jai Chandran

கொரோனா அச்சம்:தனி அறையில் அமிதாப்..

Jai Chandran

Leave a Comment