Cinema Journalist Union
விமர்சனம்

‘பொன்மகள் வந்தாள்’ – விமர்சனம்

இதுநாள் வரை ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமைகளிலும் வெள்ளித் திரைகளில் திரையரங்குகளில் மட்டும் வெளியாகி வந்த தமிழ் திரைப்படங்கள்., இனி, திரை ரசிகர்களின் வீடுகளுக்குள்ளேயே நேரடியாக வெளியாகும் கால கட்டம் இது! அப்படிப்பட்ட காலச்சூழலில் இந்த வெள்ளி., தடை பல கடந்து ‘அமேசான் பிரைம் வீடியோ’ வாயிலாக தமிழ் சினிமா ரசிகர்களின் வீடுகளை வந்து அடைந்திருக்கும் திரைப்படம்தான்
‘பொன்மகள் வந்தாள்..!’

இந்த புத்தம்புதிய முயற்சியின் தொடக்கமாக எடுத்த எடுப்பிலேயே ‘பொன்மகள் வந்தாள்’ எனும் பாசிடிவ்வான, டைட்டிலுடன் நம் இல்லங்களுக்கு., தனது காதல் கணவர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா கதையின் நாயகியாக நடிக்க இன்று நேரடியாக வந்துள்ள இத்திரைப்படம் பொன்மகள் வந்தாள்… என போற்றி புகழும்படி இருக்கிறதா? இல்லையா.?!

என்பதை இதோ , இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்!

பெண் குழந்தைகளுக்கு எதிராக இந்த ஆண் ஆதிக்க சமுதாயம் எப்படி எல்லாம் செயல்படுகிறது ?இந்த பொல்லாத சமூகத்தில் எப்படி எல்லாம் நிறையப்பெண் குழந்தைகள் அறியாப்பருவத்திலேயே சீரழிக்கப்படுகின்றனர்.?! அவர்களை கயவர்கள், ,காமுகர்களிடமிருந்து எப்படி பாதுகாப்பது? பெண் குழந்தைகளையும், பெண்களையும் எப்படி காம கண்ணோட்டத்துடன் பார்க்காமல் சமூக கண்ணோட்டத்துடன் பார்த்து மரியாதையுடன் நடத்துவது என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடையளிக்க முற்பட்டிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில், ஜோ -வெண்பா எனும் வழக்கறிஞர் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கதைப்படி ., ‘ஊட்டி- லவ்டேல் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன் நடந்த இரண்டு இளைஞர்கள் மற்றும் பல சிறுமியர் கொலை வழக்கில் சைக்கோ பெண் கொலையாளியாக சித்தரிக்கப்பட்டு என்கவுண்ட்டரில் சுட்டுத்தள்ளப்பட்ட வடநாட்டுபெண்., குற்றவாளியே அல்ல, மேலும் ,அவர், வடநாட்டு பெண்ணே அல்ல… ‘

எனவே, அந்த வழக்கில் உண்மை. குற்றவாளியை வெளிச்சத்திற்கு கொண்டுவர அந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என மனு போட்டு ஊட்டி கோர்ட்டில் அந்த வழக்கை விசாரணைக்கு கொண்டுவருகிறார் வழக்கறிஞர் வெண்பா – ஜோதிகா !

ஜோ நினைத்தபடியே அந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்தாரா ? இல்லையா.?!
15 வருடத்திற்கு முந்தைய அந்த வழக்கை ஜோ , தூசி தட்டக்காரணம் என்ன? ஜோவிற்கும் அந்த வழக்கிற்கும் என்ன சம்மந்தம் ..? அந்த வழக்கில் ஜோவிற்கு பக்கபலமாக இருப்பது யார்? எதிராக இருப்பது யாரெல்லாம் ..? என்பதுதான் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் கதையும் களமும்!

ஜோ, கோர்ட்டில் வழக்கறிஞர் வெண்பாவாக நாட்டில் பெண் குழந்தைகளுக்கு அனுதினமும் நடக்கும் அவலங்களை அடுக்கடுக்காக பட்டியலிட்டு வாதாடும் காட்சிகளிலும் சரி., தன் பெண் குழந்தையை காமுக கயவர்களிடம் பறி கொடுத்து பரிதவிக்கும் பாதிக்கப்பட்ட தாய் சக்திஜோதியாக தன்னை உருவகப்படுத்திக்கொள்ளும் காட்சிகளிலும் சரி நடிப்பால் மிரட்டியிருக்கிறார் மிரட்டி. கூடவே இப்படிப்பட்ட அவலமான சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோமா?! என நம்மை யோசிக்கவும் வைக்கிறார்.

‘தன் கெளரவத்திற்கு பங்கம் வந்துவிடக்கூடாது …’ என படுபாதகங்களை கொலை பாதகங்களை செய்யும் பெரியமனுஷர் வரதராஜன் கேரக்டரில் ‘மம்பட்டியான்’ தியாகராஜன், ஜோ வுக்கு பக்கபலமான காட்ஃபாதராக கே.பாக்யராஜ், , ஜோவை ஜெயிக்க சென்னை சிட்டியில் இருந்து ஊட்டிக்கு வரும் பெரிய வழக்கறிஞராக ஆர்.
பார்த்திபன் , நேர்மையான நீதிபதியாக பிரதாப் போத்தன், அவரது வக்கீல் நண்பராக ஆர்.பாண்டியராஜன் உள்ளிட்ட ஐந்து பெரும் இயக்குன நடிகர்கள் வெறும் நடிகர்களாக மட்டும் இந்தப்படத்தில் பங்கெடுத்துள்ளனர்.

அவர்களைப்போன்றே போலீஸ் இன்ஸ்’ ஆக வந்து டிஎஸ்பி ஆகும் சுப்பு பஞ்சு, ஆரம்பகட்ட அரசு வக்கீலாக வரும் கஜராஜ் , அவ்வப்போது வக்கீலாக கோர்ட்டிலும் நிறைய நேரம் ஜோவின் வீட்டிலும் ‘தன் கேரக்டர் என்ன என்பதே தெரியாமல் தென்படும்’ வினோதினி,
கோர்ட் காம்பவுண்டில் ‘ஈ கடை நடத்தும் ஓ , சாரி., டீ கடை ‘ நடத்தும் கிரேன் மனோகர்… என இன்னும் சில நட்சத்திரங்கள் தங்கள் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.

ஆர்.பார்த்திபனுக்கு 15 ஆண்டுக்கு முன் உண்மையாக என்ன நடந்தது? என்பதை டிஎஸ்பி சுப்பு பஞ்சு விளக்கும் காட்சியில் இருள் கவ்வும் ஊட்டி இயற்கை எழிலில் காமிரா வானத்து நிலவுக்கு சென்று பின் ப்ளாஷ்பேக்கிற்கு செல்லும் காட்சிகள் ரூபனின் பலே படத்தொகுப்பிற்கும், ராம்ஜியின் ஒவிய ஒளிப்பதிவுக்கும் சான்று. சற்று சோகமயமான கதையோட்டமுடைய இந்த மொத்த படத்தையும் அந்த சோகமயம் நிறைய இடங்களில் பெரிதாக தெரியாத அளவிற்கு தூக்கி நிறுத்துவது ராம்ஜியின் அழகிய ஒளிப்பதிவு தான் என்றால் மிகையல்ல.

கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம். அதேநேரம், பாடல்கள் இசை கதையோட்டத்துடனேயே கலந்து வருவதால் பாடல்களில் பெரிய ஈர்ப்பு இல்லாதது குறை .

ஜே.ஜே. ப்ரட்ரிக் கின் எழுத்து இயக்கத்தில்., ‘உங்க மகனுக்கு துப்பாக்கியால் சுடத்தெரியுமா?’ எனக் குற்றவாளி கூண்டில் நிற்கும் வரதராஜன் – தியாகராஜனிடம் கேட்கும் வக்கில் ஜோதிகா., தியாகராஜன் தன் மகனுக்கு துப்பாக்கியால் சுடத்தெரியாது எனத்தெரிவித்ததும் ., அதுபற்றி தொடர்ந்து தன் வாதத்தை எடுத்து வைக்காமல் அடுத்தடுத்த பாயிண்ட்டுகளை கோர்ட்டில் பேசுவது உள்ளிட்ட ஒருசில குறைகள் படத்தில் ஆங்காங்கே தென்படுகிறது.

எனினும் .,
பெண் குழந்தைகளுக்கு எதிராக இந்த ஆண் ஆதிக்க சமுதாயம் எப்படி எல்லாம் செயல்படுகிறது ? பெண் குழந்தைகைளை கயவர்கள், ,காமுகர்களிடமிருந்து எப்படி பாதுகாப்பது..? பெண் குழந்தைகளையும், பெண்களையும் எப்படி காம கண்ணோட்டத்துடன் பார்க்காமல் சமூக கண்ணோட்டத்துடன் ஆண்பிள்ளைகள் பார்த்து மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதை இருபாலரின் பெற்றோரும் எப்படி எப்படியெல்லாம் தங்கள்
குழந்தைகளுக்கு சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும் எனப்பெரும் பாடமே நட.த்தியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ நிச்சயம் பெருமைக்குரிய திரைப்படமே!

ஆகமொத்தத்தில் ,
”பொன்மகள் வந்தாள்’ – ‘பொறுப்பான கருத்துகளை தந்தாள்” எனலாம்!

Related posts

பிழை (பட விமர்சனம்)

CCCinema

வால்டர் (பட விமர்சனம் )

Jai Chandran

ராஜாவுக்கு செக் (பட விமர்சனம்)

CCCinema

Leave a Comment