Cinema Journalist Union
சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் – தீபாவளி மலர்-2020’ பொக்கிஷம் வெளியானது !

banner

‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் – தீபாவளி மலர்-2020’ புத்தக பொக்கிஷத்தை , தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ‘அஷ்டாவதானி ‘ டி.ஆர் @ டி.ராஜேந்தர் வெளியிட சினிமா பத்திரிகையாளர் சங்க தலைவர் D.R.பாலேஷ்வரும் , இம்மலர் குழுத்தலைவரும் சினிமா பத்திரிகையாளர் சங்க செயலாளருமான
R.S. கார்த்திகேயனும் பெற்றுக்கொண்டனர். உடன் , சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் வின்சன் C.M , ‘ராயல்’ பிரபாகர் ,M. மோகன்ராஜ் , உறுப்பினர் K.B.R. கோபி … உள்ளிட்டோர்.

இந்நிகழ்வின் போது ஒரு தீபாவளி மலர் – 2020 ஒரு புத்தகம் போதும்யா எதுக்கய்யா 2 புத்தகம் தருகிறாய் என்ற டி.ஆரிடம், அங்கு சென்றிருந்த நம் சங்கத்தினர் ஒட்டுமொத்த குரலில் இதோ , இந்த மலரின் அட்டப்படத்துல நடிகர் விஜய் சேதுபதி நடித்து தயாரித்துள்ள ‘லாபம்’ பட விளம்பர டிசைன்ஸ் வந்துள்ளது. அதுமாதிரி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவுகள் தங்களுக்கும் , தங்கள் அணியினருக்கும் இரட்டிப்பு லாபம் தாட்டும் என்பதற்காகவே 2 புத்தகங்கள் தங்களிடம் தந்தோம் எனக்கூற.,

ரொம்ப சந்தோஷம். ஆனாலும், நான் உஷா வாரப்பத்திரிகை நடத்தினவன், பத்திரிகைகாரன் ஒரு Book Print பண்ணி வெளிக்கொணர எவ்வளவு காஸ்ட் ஆஃப் புரடக்ஷன் ஆகும் ? என்பது தெரிந்தவன்… என்பதால் புத்தகத்தை வேஸ்ட் பண்ணாதீங்க, என்ன மாதிரி படிக்கிற டேஸ்ட் தெரிஞ்சவங்களுக்கு ஒன்று, மட்டும் கொடுங்கன்னு சொன்னேன்.சரிதானே .?! என தன் பாணியில் தலையை சிலுப்பியடி டி.ஆர். சொன்னார். வாஸ்தவமான பேச்சு என தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு நிற்கும் அவரை மீண்டும் ஒரு முறை வாழ்த்திவிட்டு வந்தோம் நம் சங்கம் சார்பில் ..!

 

banner

Related posts

சூரரைப் போற்று பாடல்

Jai Chandran

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘கால் டாக்ஸி’ பட டீசர்!

CCCinema

Actor Santhanam cuts the ribbon; Stars make the ceremony glow

CCCinema

Leave a Comment