Cinema Journalist Union
சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள் நிகழ்வுகள்

கொஞ்ச காலத்தில் , நடிப்பில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு !- இயக்குநர் சுசீந்திரன்

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு
இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…

சிம்புவைப் பற்றி எங்களைவிட ரசிகர்களாகிய உங்களுக்குத்தான் அதிகமாக தெரியும். ஏனென்றால் எங்களைவிட அதிகமாக நீங்கள்தான் அவரை அதிகமாக பின்தொடருகிறீர்கள்.

ஆனால், சிம்புவுடன் நான் பழகும்போது தான் தெரிந்தது. அவருக்கு ஏன் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று. இன்னும் சில வருடங்களில் நடிப்பில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் என்பதில் ஐயமில்லை. இந்த வருடத்திலேயே அவர் நடிப்பில் 3 படங்கள் வெளியாகும்.

சிம்புவை வைத்து இயக்க போகிறேன் என்றதும் பல தயாரிப்பாளர்கள் எனக்கு போன் செய்து வேண்டாம் என்றார்கள். ஆனால், சிம்பு மற்றவர்கள் சொல்வதற்கு காது கொடுக்காதீர்கள். என் பின்னால் நீங்கள் மட்டும் இருங்கள், படப்பிடிப்பிற்கு 9ஆம் தேதி அன்று நான் இருப்பேன் என்றார். அதேபோல், நானும் இயக்கினேன். ஒரு மாதத்திலேயே படப்பிடிப்பு முடிந்து பொங்கலுக்கு வெளியிடுகிறோம்.

இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. சிலர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். அவர்களையெல்லாம் ‘ஈஸ்வரன்’ படத்தின் வெற்றி விழாவில் சந்திக்கிறேன்.

நிதி அகர்வாலை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி.

இப்படம் விரைந்து முடித்து வெளியாவதற்கு தயாரிப்பாளர் பாலாஜி காப்பா தான் காரணம். அவருக்கு மிகப்பெரிய நன்றி.

அதே மாதிரி ,இப்படத்தில் சிம்பு நடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் KVதுரை.

விழாவில் , இயக்குனர் பாரதிராஜா , சிம்பு , நடிகையர் நந்திதா , நிதி அகர்வால் , எடிட்டர் ஆண்டனி உள்ளிட்டோரும் பேச இறுதியாக ‘ஈஸ்வரன்’ பட இசைத்தகடு சிம்பு ரசிகர்கள் முன்னணியில் வெளியிடப்பட்டது சிறப்பு!

Related posts

டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது

CCCinema

கொரோனா தொற்று : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அட்வைஸ்

Jai Chandran

தமிழ் சினிமாவுக்கு வரும் பாலிவுட் மாடல் அழகி மீனாட்சி ஜெய்ஸ்வல் !

CCCinema

Leave a Comment