Cinema Journalist Union
சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

சமூக சிந்தனையுள்ள விழிப்புணர்வு படமாக ‘டாம் தூம் கல்யாணம்!’

banner

ஸ்ரீ சாந்த துர்கை அம்மன் மூவீஸ் படநிறுவனம் சார்பில் “டாம் தூம் கல்யாணம்” படத்தை தயாரித்திருப்பதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்
டாக்டர், ஏ. ஸ்ரீ மோகன்ராஜ். இணை தயாரிப்பு: விஜயலட்சுமி.

ஸ்ரீநிஜா, மகேஷ், ராஜேந்திரன், லட்சுமணன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு தஞ்சை டாக்டர். சந்திரமோகன் பாடல்கள் இயற்ற, ருத்தராயன் இசையமைக்க, விஜய்குமார் ஒளிப்பதிவு செய்ய, சாய் சரவணன் நடனம் அமைக்க, கதை – திரைக்கதை – வசனம் – டைரக்‌ஷன் ஆகிய பொறுப்புக்களை ஏற்றுள்ளார் மாடசாமி.

தாலி கட்டிய கணவனின் தில்லுமுல்லுகளை சகிக்க முடியாமல் மனைவி அவனை விவாகரத்து செய்து பிரிந்து வாழ்கிறாள். அப்போது அவளை திருமணம் செய்து கொள்ள ஒருவன் முன்வருகிறான். அவளும் அதற்கு சம்மதிக்கிறாள். அவர்களின் திருமணத்தன்று அவளது முன்னாள் கணவன் குறுக்கிட, திருமணம் தடைபடுகிறது. தடைபட்ட திருமணம் மறுபடியும் நடந்ததா, இல்லையா என்பது கதைக்கரு.

சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்துவிட்டு, இது சமூக சிந்தனையுள்ள விழிப்புணர்வு படம் என்று பாராட்டி, ‘யு’ சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள்.

banner

Related posts

‘வருங்கால சினிமா’விற்கு உதவிக்கரம் நீட்டிய ‘ஃபெப்சி ‘ சிவா!

CCCinema

பிந்துமாதவி, தர்ஷனா பானிக் நடிக்கும் படத்தின் தலைப்பு “யாருக்கும் அஞ்சேல்

CCCinema

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த பாரதிராஜா

CCCinema

Leave a Comment