Take a fresh look at your lifestyle.

பெற்றோர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் படம்!

394

ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கும் புதிய படம் காயல். இப்படத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ் , காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ்திலக், ரேடியோ சிட்டி பரத் ஆகியோர் நடிக்கிறார்கள். அனுமோள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சாதி மாற்று திருமணத்தை எதிர்க்கும் பெற்றோர்களால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் படமாக உருவாகி இருக்கும் காயல் திரைப்படம் காதலும் பயணமும் கலந்த ஒரு திரைவடிவம்.

ஒரு பெண்ணுடைய தேர்வை அங்கீகரிக்காத  சமூகத்தை நோக்கி கேட்கப்படும் கேள்வியே இத்திரைப்படத்தின் ஆணிவேராக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் தமயந்தி.

முழுக்க முழுக்க கடல் சார்ந்த இடங்களான பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.

கார்த்திக் சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில், பி.பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பில்,
ஜஸ்டின் கெனன்யாவின் இசையமைப்பில் உருவாகி வரும் இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.