Take a fresh look at your lifestyle.

நான் நடிகர் விக்ரம் படத்தில் நடிக்கவில்லை. விக்ரம் படத்தில் நடிக்கிறேன்!

282

முதலில் ஒரு விஷயத்தை தெளிவுப் படுத்திவிடுகிறேன் என்று எடுத்தவுடன் பேசத் தொடங்கினார் நடிகர் நரேன். நான் கமல் சார் நடிக்கும் விக்ரம் படத்தில்தான் நடிக்கிறேன். சில பத்திரிகைகளில் விக்ரம் படத்தில் நடிக்கும் நரேன் எனும் தலைப்பை பார்த்துவிட்டு நடிகர் விக்ரம் படத்தில் நடிப்பதாக எனக்கு வாழ்த்து சொல்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் “விக்ரம்” படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறேன். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் நடித்ததற்கு நல்ல வரவேற்பை பெற்றிருந்தேன். விக்ரம் படத்தின் டீசர் வெளியான போது லோகேஷிற்கு வாழ்த்து தெரிவித்தேன். அப்போது தான் அவர் சொன்னார், உங்களுக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் விக்ரமில் உண்டு என்று. ஒரு கனவு நிறைவேறியதை போல உணர்வு பெறுகிறேன். கமல் சாரை பார்த்து சினிமாவுக்குள் நுழைந்த பல பேரில் நானும் ஒருவன்! அவர் படத்தில் நடிப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி என்கிறார் நரேன்.