Take a fresh look at your lifestyle.

தயாரிப்பாளர், நடிகர் JSK சதீஷ் குமார் @JSK அவர்களின் புதிய அவதாரம் !

289

திரைத்துறையில் JSK என அறியப்படும் JSK சதீஷ்குமார், தரமான படங்களில் ஆர்வம் கொண்டவராகவும், தமிழ் ரசிகர்களுக்கு புதிய களங்களில் வித்தியாசமான படங்களை வழங்குவதிலும் சிறந்து விளங்குபவர். 23 சிறந்த திரைப்படங்களை ரசிரகர்களுக்கு தந்து, திரைத்துறையில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக மகத்தான அந்தஸ்தைப் பெற்றுள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனமான JSK Film Corporation, ராமின் தங்க மீன்கள், குற்றம் கடிதல், இயக்குனர் பாலாவின் பரதேசி, விஜய்சேதுபதியின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மற்றும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற கிளாசிக்கல் ஹிட் படங்களை உருவாக்கியுள்ளது. இயக்குனர்களிடமிருந்து தரமான கதைகளை உள்ளிழுத்து, வெள்ளி திரையில் மிக நல்ல சினிமாவை தரும் அவரது திறமை, அவரை இந்திய சினிமா துறையில் புகழ்பெற்ற தயாரிப்பாளராக ஆக்கியுள்ளது. இது அவருக்கான பாராட்டு அறிக்கை அல்ல, திரைப்படங்கள் மீதான அவரது காதலின், அர்ப்பணிப்பின் அடையாளம் மட்டுமே. திரையில் இயக்குனர் ராம் இயக்கிய தரமணி படம் மூலம் ஒரு சிறந்த நடிகராகவும் தன்னை நீருபித்து அனைவரிடத்திலும் பாராட்டுக்களை குவித்தார், அவரது கதாபாத்திரம் மற்றும் நடிப்பு, அவருக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று தந்தது. அப்படத்தை தொடர்ந்து மம்முட்டி நடித்த பேரன்பு மற்றும் கபடதாரி ஆகிய படங்களில் அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். பிந்தைய திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பின் மூலம் டோலிவுட்டிலும் நடிகராக அறிமுகமானார். கபடதாரியில் அவர் முக்கியமான பாத்திரத்தில் அசத்தியிருந்தார். இது அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நல்ல பிரபல்யத்தை பெற்று தந்தது. அண்மையில் தமிழில் வெளியான ‘ஃபிரண்ட்ஷிப்’ திரைப்படத்தில் வில்லனாக அவரது சிறந்த நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. அவரது சிறந்த நடிப்பிற்காக பார்வையாளர்கள் அவரை பெருமளவில் பாராட்டினார்கள். அடுத்தடுத்த படங்களில் ஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் JSK திரையுலகில் தொடர்ந்து கலக்கவுள்ளார்.

 

எல்லா மொழிகளிலும் சமமான பிரபல்யத்தை கொண்டிருக்கும் பன்முகதன்மை கொண்ட குணசித்திர நடிகர்களுக்கு, திரைப்படத் துறை எப்போதுமே சிறப்பான இடத்தை தந்துள்ளது. அவர்கள் எந்த ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்தாலும் அவரகளது நடிப்பு, மக்களின் மனங்களை வெல்வது உறுதி. JSK அந்த வகையில் ஒரு நடிகராக தனது சிறப்பான நடிப்புதிறன் மூலம் தற்போது ஒரு சிறப்பான இடத்தை பெற்றுள்ளார். அவரின் ஈடுபாடும் ஆர்வமும் இங்கே மதிக்கப்படுகின்ற வகையில், திரைத்துறையில் நிரந்தரமான சிறந்த நடிகராக அவர் என்றென்றும் இங்கே நிலைபெற்று இருப்பார்.

இயக்குநர் நவீனின் “அக்னி சிறகுகள்”, வசந்த பாலனின் “அநீதி” ஆகிய படங்களில் JSK மிக முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளார். இது தவிர, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் பிந்து மாதவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள, விரைவில் வரவிருக்கும் ‘யாருக்கும் அஞ்சேல்’ படத்தில் அவர் வில்லனாக நடித்துள்ளார்.

நடிகராக வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், தனக்கு பொருத்தமான, நல்ல கதாப்பாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் JSK.