Take a fresh look at your lifestyle.

காவல்துறையில் அதிகாரத்தில் இல்லாதவர்கள் எல்லோருமே அடியாள் தான்.

ரைட்டர்' படம் பேசும் உண்மை.

330

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரொடக்‌ஷன்ஸ்” தயாரிப்பு என்றாலே தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ்ச் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற படைப்புகளாகவே இருக்கும் என்கிற எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வெளியாகி இருக்கிறது “ரைட்டர்” திரைப்படத்தின் டீசர்.

சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் இப்படத்தை இயக்கி இருப்பவர் பிராங்க்ளின் ஜேக்கப். இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

சமூகத்தின் எல்லா மட்டத்தினரிடமும் கட்டற்ற அதிகார பலத்துடன் விளங்கும் காவல்துறையின் உள்ளே இருக்கிற அதிகார கட்டுமானத்தின் அடுக்குகளையும், அதன் சொல்லப்படாத பக்கங்களையும் விவிரிக்கும் விதமாக உருவாகி இருக்கும் இத்திரைப்படம் வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாகிறது.

இனியா, போஸ் வெங்கட், சுப்ரமணியம் சிவா, ஹரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தை “லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ்” மற்றும் “கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ்” ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.