Take a fresh look at your lifestyle.

இயக்குநர் பாலா தயாரிப்பில் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள ‘விசித்திரன்’ படத்திற்கு சில புதிய திரையரங்குகளும் , ஏற்கனவே ரிலீஸ் செய்யப்பட்ட சில திரையரங்கங்களில் திரையிடப்படும் காட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது !!

336

பாலா தயாரிப்பில் ஆர்.கே.சுரேஷின் வித்தியாசமான நடிப்பில் கடந்த வாரம் மே 6ல் ரிலீசான திரைப்படம் ‘விசித்திரன்’.

இந்த படம் மலையாள படமான ஜோசப் படத்தின் ரீமேக்காகும். மலையாள வெர்ஷனை இயக்கிய ஜி.பத்மகுமாரே தமிழிலும் படத்தை இயக்கியுள்ளார்.

நாயகிகளாக பூர்ணா மற்றும் மதுஷாலினி நடித்திருந்தனர். பக்ஸ், இளவரசு, மாரிமுத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

க்ளைமாக்ஸ் காட்சியில் ஜான் மகேந்திரனின் வசனங்கள் ரசிகர்களின் அப்ளாஸை அள்ளியது.

உடல் உறுப்புகள் தானம் என்ற பெயரில் வியாபாரம் பேசும் மெடிக்கல் மாஃபியாக்களை நம் கண்முன் நிறுத்தியது. இது மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

இந்த படம் வெளியானது முதலே பத்திரிகையாளர்களிடமும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அரசியல் பிரபலங்கள் திரைப் பிரபலங்கள் என பலரும் ஆர்கே. சுரேஷின் நடிப்புக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் பிரபலங்கள் ஷிவானி, பாலாஜி, ஜூலி, தாமரை உள்ளிட்டோர் தாங்கள் விசித்திரனை கண்டு வியந்தோம் என தெரிவித்தனர்.

மாயன் என்ற ஒரே கேரக்டருக்காக 80 கிலோ எடை… 90 கிலோ எடை.. 120 கிலோ எடை என தன் உடல் எடையை ஏற்றி இறக்கி தன்னை அர்ப்பணித்திருக்கிறார் ஆர்.கே.சுரேஷ்.

மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் என்பவர் தான் இந்த கேரக்டரில் நடித்திருந்தார். எனவே அவரின் சாயல் வந்துவிடக்கூடாது என்பதிலும் தான் , ரொம்பவே கவனமாக இருந்ததாக தெரிவித்திருந்தார் ஆர்.கே.சுரேஷ்.

அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் விசித்திரன் பெற்று வருவதால் தமிழகத்தில் சில தியேட்டர்களில் திரையிடப்படும் காட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஒரு நல்ல படைப்பை கொடுத்தால் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதற்கு ‘விசித்திரன்’ ஒரு நல்ல உதாரணம் என்றால் மிகையல்ல !