Take a fresh look at your lifestyle.

“மம்முட்டியுடன் இதுவரை இணைந்து நடிக்காமல் போக நான் காரணமில்லை !” -கமல்ஹாசனின் ஒளிவு மறைவு இல்லாத பேச்சு !!

288

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‛விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் 3ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக தமிழ், தெலுங்கு,மலையாளம் இந்தி என நான்கைந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இதற்காக கமல் சென்னை, மும்பை, ஐதராபாத்… என இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் மாறிமாறி கலந்து கொண்டு வருகிறார். அந்த வரிசையில் கேரளாவுக்கு சென்ற கமல் அங்கே மோகன்லால் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இந்த படத்தை புரமோட் செய்தார். மேலும், மற்றொரு புரமோஷன் நிகழ்ச்சியில் கமல் பேசும்போது மம்முட்டியுடன் தான் இணைந்து நடிக்க விரும்புவதாகவும் கூறினார்.

இவ்வளவு நாட்களாக ஏன் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கவில்லை ? என மலையாள நிருபர்கள் கேட்டபோது, “பலமுறை நானும் மம்முட்டியும் அமர்ந்து பல கதைகளை விவாதிப்போம்.. ஆனால், எதுவுமே சரியாக அமையவில்லை. எனக்கு ஓரளவுக்கு திருப்தி என்றாலும் கூட, கொஞ்சம் பொறுங்கள்… நல்ல கதையாக அமையட்டும் நாம் இணைந்து நடிப்போம் என்று மம்முட்டி கூறிவிடுவார். இப்போது, உங்கள் ஊர் பகத் பாசிலுடன் நான் இணைந்து நடித்துள்ள, இந்த விக்ரம் படம் வெளியாக இருக்கிறது. ஒருவேளை இதைப் பார்த்தபின் மம்முட்டி நிச்சயம் என்னுடன் இணைந்து நடிக்க சம்பாதிப்பார்… என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார் கமல்.

மலையாளத்தில் இன்னொரு முன்னணி நடிகரான மோகன்லாலுடன் பத்து வருடங்களுக்கு முன்பே ‘உன்னைப் போல் ஒருவன்’ தமிழ் படத்தில் கமல் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘விக்ரம்’ படத்தின் கேரள புரமோஷனுக்கு போன இடத்தில் உலகநாயகனின் இந்த ஒப்பன் டாக் கிற்கு பிறகு., கமலும் மம்முட்டியும் வேறு ஏதும் படத்தில் இணைந்து நடிக்கிறார்களா ? பொறுத்திருந்து பார்ப்போம் !!