‘எல்லாம் அவன் செயல்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்கே.
ஒருபக்கம் சினிமாவில் நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் ஆர்கே வுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது.
கடந்த 21 வருடங்களாக வெற்றிகரமான தொழில் அதிபராக பெரும் பிசினஸ்மேனாக வலம் வரும் ஆர்கே., தனது புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை கடந்த சில வருடங்களுக்கு முன் மார்க்கெட்டில் கொண்டு வந்தார்.
இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் நிறுவன தூதராக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மூலமாக இதை அறிமுகப்படுத்தி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார்.
தலைமுடிக்கு ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ உருவாகியுள்ளது. வழக்கமான ஷாம்பூவை பயன்படுத்துவதை போல இதை பயன்படுத்த முடியும்.. குறிப்பாக இது கைகளில் ஒட்டாது என்பது தான் இதன் தனித்தன்மையே.. இதற்காக இருபது வருடங்களுக்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார் ஆர்கே என்பது கவனிக்கத்தக்கது.
மேலும் சென்னையில் 1005 நபர்களை ஒரே இடத்தில் ஒன்று கூட்டி ஒரே சமயத்தில் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை அவர்களை பயன்படுத்த செய்து, அதன்மூலம் இதன் தரத்தை உறுதி செய்ததுடன் கின்னஸ் சாதனையையும் ஆர்கே நிகழ்த்தி காட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சில வருடங்களுக்கு முன் வைகை எக்ஸ்பிரஸ் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் ஆர்கே.. படத்தின் பெரும்பகுதி காட்சிகள் ரயிலிலேயே நடக்கும் விதமாக அந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது.. அந்த வகையில் ரயில் அவரது மனதுக்கு நெருக்கமானாதாலோ… என்னவோ, இப்போது இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை மக்களிடம் இன்னும் அதிக அளவில் கொண்டு சேர்ப்பதற்காக ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து, ரயில் எஞ்ஜின்கள் முழுவதையும் வண்ணமயமான விஐபி ஹேர் கலர் ஷாம்பூ விளம்பரத்தால் அலங்கரித்து புதுமையான விளம்பர உத்தியை மேற்கொண்டுள்ளார் நடிகர் ஆர்கே. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.