Take a fresh look at your lifestyle.

“என்ன வேலை என்ன படிப்பு.?!”

'ஜெயா ப்ளஸ் தொலைகாட்சியில்‘ மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டி நிகழ்ச்சி !

345

ப்ளஸ் டூ முடித்த பின்பு என்ன படிக்கலாம் என்பதற்கு ஒரு வழிகாட்டி நிகழ்ச்சியாக ஜெயா ப்ளஸ் தொலைகாட்சியில் ‘’என்ன வேலை என்ன படிப்பு’’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நேரலையாக ஒளிபரப்பப்படும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைசார்ந்த கல்வியாளர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு கலை அறிவியல் பொறியியல் சட்டம் மருத்துவம் இவற்றில் உள்ள எந்த துறையை தேர்வு செய்யலாம் என்பது குறித்து வழிகாட்டுகின்றனர். தொலைபேசி வாயிலாக மாணவர்கள், பெற்றோர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் வல்லுனர்கள் விளக்கமளிக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் முதுநிலை, இளநிலைப்படிப்புகள், சிறந்த கல்லூரிகள், தொழில்நுட்பகல்லூரிகள் படிப்புகள் குறித்து ஏராளமான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது. நெறியாளர் கோபாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் ‘’என்ன வேலை என்ன படிப்பு’’ நிகழ்ச்சி ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 3 மணிக்கு நேரலையாக ஓளிபரப்பாகிறது.