Take a fresh look at your lifestyle.

சிங்கிள் ஷாட்’ டில் ., ‘அந்த இரவில்’ குறும் படத்தை நடித்து இயக்கியுள்ள வாரிசு நடிகர் !!

408

ஆதேஷ் பாலா . முதன் முதலாக., ‘ஒரு கதையின் கதை’ படத்தில் அறிமுகமான நடிகர். அதன் பிறகு முண்டாசுப்பட்டி , மம்பட்டியான் , சவரகத்தி , பேட்டை , திமிரு பிடிச்சவன்… போன்ற 70-கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தற்போது ‘பொன்னியின் செல்வன் ‘ படத்தில் முக்கியமானதொரு பாத்திரத்தில் நடித்து கொண்டு இருப்பவர். இதுமட்டுமில்லாமல் நிக்குமா நிக்காதா, பெரியபழுவேட்டரையர், அந்த இரவில்… உள்ளிட்ட 7 குறும்படங்களில், ( இதில் சில…. சிங்கிள் ஷாட் குறும் படங்கள்…) தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ., அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடிப்பவர். இத்தனை சிறப்புகளுக்கும் சொந்தக்காரர் யார் ? எனக் கேட்டால் ., அவர்தான் நடிகர் பாக்கியராஜால் உருவாக்கப்பட்ட காமெடி நடிகர் சிவராமனின் மகனான நடிகர் ஆதேஷ் பாலா !!

தூறல் நின்னு போச்சு, இணைந்த கைகள், காதல் பரிசு உள்ளிட்ட 350-கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சிவராமன் என்றால் ., இன்று ., அப்பாவின் பெயரை காப்பாற்றும் மகனாக தன் தந்தையையும் தாண்டி வலம் வருகிறார் ஆதேஷ் பாலா !

யெஸ் .,

10 நிமிட சிங்கிள் சாட் குறும்படமாக
நடிகர் ஆதேஷ் பாலா நடித்து இயக்கி உள்ள படம் தான் ‘அந்த இரவில்’ .

‘அந்த இரவில்’ சிங்கிள் ஷாட் குறும்படத்தில் ., மூன்று கதாப்பாத்திரங்களை ஒரே நபராக எற்று நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஆதேஷ் பாலா என்றால் மிகையல்ல ! இந்த குறும்படத்திறக்கு இசை பல திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம் !

ரமேஷ் வினாயகம் இசையில்.,
கவிஞர் விஜேபி யின் வரிகள் வைர வரிகள் …
இந்த குறும்படத்திற்கு பேக்ரவுண்ட் வாய்ஸாக பின்னனி குரல் கொடுத்திருக்கிறார் நடிகர் நிழல்கள் ரவி.

படத்தொகுப்பு -அன்பு ,
ஒளிப்பதிவு- சுபாஷ் அலெக்சாண்டர், வளர்ந்து வரும் பி ஆர் வோ சுந்தர் பாலா , முருகவேல் மாணிக்கம், ஆல்பர்ட், கண்ணன் போன்றோர் உதவி ., இக்குறும்பட உருவாக்கத்தின் போது ஆதேஷ்பாலாவுக்கு பேருதவியாம் ! சவுண்ட் சரவணன் ராமச்சந்திரன் மற்றும் அப்துல் ரஹ்மான், ராயன்., ஸ்பான்சர் நடிகர் சின்ராசு … ஆகியோரின் உதவிகளையும் மறக்க முடியாது என்கிறார் ஆதேஷ் பாலா !

‘அந்த இரவில்’ படத்தின் பேனர் சென்னை விஜயா போரம் மால் பலாஸோ திரையரங்க வாசலில் ஆதேஷின் நண்பர்களால் பெரிதாக வைக்கப்பட்டு இருக்கிறது, குறும்படத்திற்கு இந்த அங்கீகாரம் இதுவே முதல் முறை… என்பது குறிப்பிடத்தக்கது !