Take a fresh look at your lifestyle.

மலேசியாவிலும் ‘மிரள்’! வெளியிடுகிறது பிரபல படநிறுவனம் !!

242

Axess Film Factory G டில்லி பாபு தயாரிப்பில், M சக்திவேல் இயக்கத்தில் நடிகர் பரத் – வாணி போஜன் ஜோடி நடித்துள்ள திரைப்படம் “மிரள்”.

புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்த படத்தின் வெளி நாட்டு உரிமத்தை வாங்கியுள்ள பிரபல நிறுவனமான அம்மா புரொடக்சன்ஸ் SDN bhd நிறுவனம் மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் ‘மிரள்’ படத்தை வெளியிடுகிறது.

இந்த படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெருகிறது !

இந்த நிகழ்வில் ‘மிரள்’ படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவரும் கலந்துகொள்ள ஒரு ‘நட்சத்திர கலை இரவு’ அளவில் இந்த வெளியீட்டு நிகழ்ச்சியை மலேசியாவில்., ‘மிரள்’ படத்தின் வெளி நாட்டு உரிமத்தை வாங்கியுள்ள பிரபல நிறுவனமான ‘அம்மா புரொடக்சன்ஸ் SDN bhd’ நிறுவனம் வாயிலாக நடத்திட உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.