Take a fresh look at your lifestyle.

டயலாக்ப்ரோமோ மூலம் நம் ஆர்வத்தை அதிகரிக்க வருகிறது அமேசான்

318

ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரான நிஷப்தம் படத்தின் புதிய டயலாக் ப்ரோமோ மூலம் நம் ஆர்வத்தை அதிகரிக்க வருகிறது அமேசான்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் இந்த ப்ரோமோ, அதிகாரிகள் தீர்க்க முயற்சிக்கும் கொலையின் பின்னால் இருக்கும் மர்மத்தின் தீவிரத்தை காட்டுகிறது.

டி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிப்பில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 2, 2020 முதல் நிஷப்தம் திரைப்படத்தை தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் பிரத்யேகமாக ஸ்டிரீம் செய்யலாம்.

அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் ப்ரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப் டீல்களை உடனடியாக பெறுதல், பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங் கண்டெண்ட் அனைத்தும் ஒரு மாதத்திற்கு ரூ.129 ரூபாயில் பெறலாம்.

மும்பை, இந்தியா, XX 2020 – ஆர் மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்த நிஷப்தம் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட பிறகு, அமேசான் ப்ரைம் வீடியோ இன்று வரவிருக்கும் தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரில் இருந்து ஒரு சுவாரஸ்யமான டயலாக் ப்ரோமோவை வெளியிட்டது. விசாரணை அதிகாரியாக நடிக்கும் அஞ்சலி, பேய் வில்லாவில் நடந்த துயர சம்பவத்திற்கும் காணாமல் போனவர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக நம்புவது போன்று இந்த ப்ரோமோவில் காட்டப்படுகிறது. விசாரணையின் மூலம் அஞ்சலி இந்த வழக்கின் மர்மங்களை விடுவித்து வழக்கை முடிக்க நினைக்கிறார்.

டி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிப்பில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நிஷப்தம் திரைப்படத்தை இந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அக்டோபர் 2, 2020 முதல் அமேசான் ப்ரைம் பிரத்தியேகமாக ஸ்டிரீம் செய்கிறது. இந்த படம் மைக்கேல் மேட்சனின் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது, மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும் சீனிவாஸ் அவசரலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.