Take a fresh look at your lifestyle.

‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’தின் புத்தக விற்பனை மையம் !

திரளாக வந்து திரைப்படத்துறை சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாங்கிய சினிமா பிரபலங்கள் !!

326

‘சண்டே ன்னா மட்டன்னு… வரும் ஃபிரைடே ‘DD ரிட்டர்ன்’னு…எனவும் ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’துக்கு ஒரு வணக்கத்தை போடு…’ எனவும் தன் பாணியில் கோஷமிட்டு அலப்பறையை கூட்டி சென்னை வர்த்தக மையத்தை குலுங்க விட்ட , நடிகர் கூல் சுரேஷ் !!”

‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’தின் புத்தக விற்பனை மையம் ! திரளாக வந்து திரைப்படத்துறை சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாங்கிய சினிமா பிரபலங்கள் !!

————-+++++++++———–

இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், சீனு ராமசாமி , நடிகர்கள் மம்பட்டியான்’ தியாகராஜன் , கே.ராஜன் , யோக் ஜேபி , கூல் சுரேஷ் , மாறன் , டேனியல் பாப் , ஜெயராவ் , ‘சிந்துநதிப்பூ’ ரவி , விஹான் அமீத் ஜாலி , படத்தொகுப்பாளர் பி. லெனின் , ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணியம் , பாலா உள்ளிட்டோர் பங்கேற்பு !!!

————-+++++++++———–

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ‘சினிமா டுடே’ எனும் சினிமா ஆர்வலர்களின் அமைப்பு நடத்திய சர்வதேச அளவிலான டிஜிட்டல் சாதனங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு , கடந்த ஜூலை 21, 22 , 23 ம் தேதிகளில் நடந்தேறி நிறைவுற்றது.

அந்த பிரமாண்ட விற்பனை கண்காட்சியின் ஒரு ஸ்டாலில் ., 69- ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் புத்தகம் விற்பனை மையம் அமைக்கப்பட்டிருந்தது.

இதில், தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை சினிமா தொடர்பான புத்தகங்கள், திரையுலக பிரபலங்கள் எழுதிய கவிதை மற்றும் சிறுகதை புத்தகங்கள், பிரபல சினிமா பத்திரிகையாளர்கள் சினிமா பற்றியும், திரையுலக பிரபலங்கள் பற்றியும் எழுதிய புத்தகங்கள், திரையுலக தொழில்நுட்ப கலைஞர்கள் எழுதிய திரைப்பட தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள், திரைப்பட வியாபாரம் சார்ந்த புத்தகங்கள் … என சினிமாத்துறையின் அனைத்து தகவல்களையும் கொண்ட பல புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இங்கு நடை பெறுவது டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த கண்காட்சி என்றாலும், புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாகவும், சினிமா சம்மந்தமான பல அறிய தகவல்களைக் கொண்ட புத்தகங்களை சினிமா விரும்பிகளிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் ‘ இந்த புத்தக விற்பனை மையத்தை திட்டமிட்டு அமைத்திருந்தது.

பிரபல திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான சீனு ராமசாமி , கண்காட்சியின் முதல் நாளான ஜூலை 21 ஆம் தேதி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சினிமா டுடே கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத் ‘ தின் புத்தக விற்பனை மையத்தை தொடங்கி வைத்ததையும் தொடர்ந்து ., அந்த மூன்று நாட்களும் ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’ தின் புத்தக மையத்திற்கு .,
திரளாக வந்து திரைப்படத்துறை சம்பந்தப்பட்ட புத்தகங்களை இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், சீனு ராமசாமி , நடிகர்கள் மம்பட்டியான்’ தியாகராஜன் , கே.ராஜன் , யோக் ஜேபி , கூல் சுரேஷ் , மாறன் , டேனியல் பாப் ,’மெட்ராஸ்’ ஜெயராவ் , ‘சிந்துநதிப்பூ’ ரவி , ‘லாக்டவுன் டைரி’ விஹான் அமீத் ஜாலி , படத்தொகுப்பாளர் பி. லெனின் , ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணியம் , பாலா , பத்திரிகையாளர் ‘தூர்தர்ஷன்’ வெங்கடேஷ் … உள்ளிட்டோர் பார்வையிட்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை ஓர் வாசகரைப்போல் , சினிமா ரசிகரைப்போல் … வாங்கி சென்றனர்.

அதிலும், நடிகரும் ‘யூ டியூப்’ பிரபலமுமான கூல் சுரேஷ் ., தான் நடித்து வரும் வெள்ளி ஜூலை 28ம் தேதி வெளியாகவுள்ள சந்தானத்தின் ‘DD ரிட்டர்ன்ஸ்’ பட விளம்பர பதாகையை கையில் ஏந்தியபடி வந்து “சண்டே ன்னா மட்டன்னு வரும் ஃபிரைடே DD ரிட்டர்ன்னு…” என்றும் சினிமா பத்திரிகையாளர் சங்கத்துக்கு ஒரு வணக்கத்தை போடு… என்றும் தன் பாணியில் கோஷமிட்டு அலப்பறையை கூட்டியது அங்கு கூடி இருந்தவர்களை குதூகலப்படுத்தியது., குறிப்பிடத்தக்கது.

‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’தின் புத்தக விற்பனை மையத்திற்கு வந்து சினிமா சம்மந்தமான நூல்களை வாங்கியும் பார்வையிட்டும் சென்ற திரையுலக பிரபலங்கள் புத்தக வாசிப்பாளர்கள் திரையுலக ரசிகர்கள் அனைவரையும் ‘சினிமா பத்திரிகையாளர் சங்க’ நிர்வாகிகள் தலைவர்-
D R பாலேஷ்வர் , செயலாளர்-R S கார்த்திக், பொருளாளர் –
A M சேவியர் ஜாஸ்பெல் , துணைத்தலைவர்கள் – மணவை பொன் மாணிக்கம் , ‘கலக்கல்’ K.சுகுமார், இணைச்செயலாளர்- J சுகுமார், செயற்குழு உறுப்பினர்கள் – ‘தினபூமி’ ஜாக்மென் விஜய் , ‘குறள் டிவி’ மோகன், A.ஹேமலதா , உறுப்பினர் N.ஆனந்த் மற்றும் ‘I’தமிழ் பாலா ‘திரைக்கூத்து’ செல்வா உள்ளிட்டோர் வரவேற்று மகிழ்ந்தது சிறப்பு !!