சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ ,’மாவீரன்’ , ஹிப் ஹாஃப் ஆதி நடித்த ‘வீரன்’… மாதிரி சூப்பர் ஹீரோ படங்கள் அடுத்தடுத்து பல கோடம்பாக்கத்தில் வந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் … ‘சூப்பர் ஹியூமன் ‘ பற்றிய படம் ஒன்று ‘வெப்பன்’ என்ற தலைப்பில் விரைவில் வெளிவரவுள்ளது.
அந்தப் படத்தில் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத ஒரு சூப்பர் ஹியூமனாக வடிவமைக்கப்பட்டிருக்கிறார் சத்யராஜ். பார்வைக்கு மனிதனைப் போலவே தோற்றமளிக்கும் அவர் உண்மையில் ஒரு எந்திரமே. யெஸ் ., கேட்கவே வித்தியாசமாகவும் , விறுவிறுப்பாகவும் இருக்கும் ‘வெப்பன்’ திரைப்படம் குறித்து மென்மேலும் தெரிந்து கொண்டால் மெய்சிலிர்த்து நிச்சயம்போவீர்கள்..!
‘சவாரி’ எனும் திரைப்படத்தையும் ‘வெள்ள ராஜா’ எனும் வெப்தொடரையும் இயக்கிய குகன் சென்னியப்பன் இயக்கியிருக்கும் ‘வெப்பன்: படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி இருவரும் கதை நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன் வில்லன் வேடமேற்றிருக்கிறார். இவர்கள் இல்லாது கதா நாயகியாக தன்யா ஹோப், மாயா, மைம் கோபி, கனிகா, யாஷிகா ஆனந்த், ராஜீவ் பிள்ளை, கஜராஜ், வேலு பிரபாகரன், பரத்வாஜ் ரங்கநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் தோன்றி நடித்திருக்கிறார்கள்.
‘மில்லியன் ஸ்டுடியோ ‘ பேனரில் எம்.எஸ்.மன்சூர் தயாரிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ’வெப்பன்’ படத்தின் டீசர் ., வெகுவிரைவில வெளியாக உள்ள நிலையில், படத்தின் இயக்குநர் குகன் சென்னியப்பன் மற்றும் தயாரிப்பாளர் எம்.எஸ்.மன்சூர் இருவரும் சமீபமாக பத்திரிகையாளர்களை சந்தித்து ‘வெப்பன்’ படம் குறித்து பேசினர்.
குகன் சென்னியப்பன் இந்தப் படத்தைப் பற்றிக் கூறும்போது, “வழக்கமாக சூப்பர் ஹியூமன் கதாபாத்திரங்கள் எல்லாமே மனித குலத்துக்கும் அது சார்ந்த சமூகத்துக்கும் ஆபத்து வருகையில் அங்கு தங்களது சக்தியைப் பயன்படுத்தி மக்களைக் காப்பதாகவே அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், அப்படி வழக்கமான படமாக இருக்கக் கூடாது… என்பதற்காக என் கதையில் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும் சத்யராஜ் ஏற்றுள்ள பாத்திரம், தன்னைக் காத்துக் கொள்வதற்காக எப்படியெல்லாம் போராடுகிறது ..? என்பதை வித்தியாசமாகவும் சொல்லி இருக்கிறேன்.
இந்த படத்தில் வரும் சத்யராஜ் மாதிரியான சூப்பர் ஹியூமன்கள் கற்பனையில் மட்டுமே சாத்தியம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜத்திலேயே நிறைய மனிதர்கள் அது மாதிரி உலகத்தில் உண்டு ., வட இந்தியாவிலோ , ஆந்திராவிலோ ஒரு சிறுவனுக்கு உடலில் மின்சாரம் ஓடிக்கொண்டே இருக்கும் என்பதையும் அவன் மீது எந்த பல்பை வைத்தாலும் அது பளீரென்று எரிவதாகவும் செய்திதாள்களில் படித்திருக்கிறோம். இதுபோன்று அரிய சக்தி படைத்த நிறைய மனிதர்கள் நம்முடன் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாருமே சூப்பர் பவர் கொண்ட ஹீயுமன்கள் தான்.
அப்படிப்பட்ட சூப்பர் ஹியூமன்களைத் தேடிக் கண்டுபிடித்து தன்னுடைய யூடியூப் தளத்தில் வெளியிடும் யூட்யூபராக வருகிறார் இந்தப்படத்தில் வருகிறார் வசந்த் ரவி. அவர் இப்படக்கதைப்படி , சூப்பர் ஹீயூமன் சத்யராஜைப் பற்றி கேள்விப்பட்டு அவரையும் அவரது சூப்பர் பவரையும் வீடியோவாக எடுத்து தன் யூடியூபில் வெளியிட வருகையில் நேரும் விஷயங்கள் தான் இப்படத்தின் கதை.
இதில் வில்லனாக ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனனை நடிக்கக் கேட்டுக் கொண்டேன். அவரும் கதை பற்றி நிறைய சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்ற பின்., எனது குருநாதரும் அவரே என்பதால் பெருந்தன்மையாக இதில் நடிக்க சம்மதித்து நடித்து கொடுத்துள்ளார்.
இதுபோன்ற சூப்பர் பவர் கொண்ட ஹீரோக்களைப் பற்றிய படங்கள் ஹாலிவுட்டில் நிறைய வந்துவிட்டன ஆனால் அவற்றில் எல்லாம் மிகப்பெரிய பட்ஜெட்டைக் கொண்டு அவர்களுடைய சாகசங்களை கதாநாயகர்கள் காட்டுவதாக கதை அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் , நம் தமிழ் சினிமாவுக்கு இந்தக் களம் முற்றிலும் புதியது என்பதால் ., அப்படிப்பட்ட முயற்சியை இதில் மேற்கொள்ளாமல், சத்யராஜ் எப்படி உருவானார் ? அவருடைய சக்திகள் என்னென்ன ..?அவர் தன் சக்திகளை காத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்கிறார் .?! எனும் அளவுடன் கதை சொல்லி இருக்கிறோம். இது நம்முடைய பட்ஜெட்டுக்குப் பொருத்தமாக இருப்பதோடு ., நம் கலாச்சாரப்படி அவரைப் புரிந்து கொள்ளவும் உதவியாக படத்தோடு படம் பார்ப்பவர்களை ஒன்ற வைத்து விடும்.
“இந்தப் படம் நாங்கள் நினைக்கும் அளவிற்கு வெற்றி பெற்றால் இதனுடைய அடுத்தடுத்த பாகங்களையும் எடுக்க திட்டமிட்டிருக்கிறோம். அது மாதிரி படங்கள் உருவாகும் சமயத்தில்., அந்த படங்களின் பட்ஜெட் அதிகமாகி கூடுதல் சிறப்புகளுடன் அந்த படங்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது..!” என்றார்.
‘வெப்பன்’ படத்தின் தயாரிப்பாளர் மன்சூர் கூறுகையில், “இந்தப் படத்தின் கதைக்களமே தமிழ் சினிமாவுக்கு புதிதாக தெரிந்ததால் இந்தப் படத்தை ரொம்பவே விருப்பத்துடன்தான் தயாரித்துள்ளோம். வரும் செப்டம்பர் மாதத்தில் இந்த ‘வெப்பன்’ படத்தை தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரிக்கும் விளம்பரங்களுடன் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறோம்..!” என்றார்.
“‘வெப்பன்’ நிச்சயம் ‘வெல்வான்’ என நாமும் நம்புவோம் !!