Take a fresh look at your lifestyle.

“‘Wow ! ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களை பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள – ‘ஹாட் ஸ்பாட்'”!!

299

கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரிக்க, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், “‘ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப்பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹாட் ஸ்பாட்'”. வரும் மார்ச் 29 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில்…நடிகர் கலையரசன் பேசியதாவது…

இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியானபோதே திரையுலகிலிருந்து, பலர் போன் செய்து திட்டினார்கள். ஆனால் முழுப்படமும் பார்த்தால் உங்களுக்கு இதன் அர்த்தம் புரியும். விக்னேஷ் கதை சொல்லும் விதம் மாறுபட்டு இருக்கலாம், ஆனால் அது சென்று சேரும் இடம் சரியாக இருக்கும். என் கதை மட்டும் தான் எனக்கு தெரியும். ஆனால் விக்னேஷ் பிரதர் மீது நம்பிக்கை இருக்கிறது. ‘யுவர்ஸ் ஷேம்புலி’ எனத் தொடர் எடுத்தார். அதுவும் இந்த மாதிரி, அலைகளை ஏற்படுத்தியது .ஆனால், அது முடியும் போது மிக அழகாக நம்மைச் சிந்திக்கும்படி செய்யும். அதே போல் இந்தப்படமும் இருக்கும், படம் பாருங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசியதாவது…

‘ஹாட் ஸ்பாட்’ படத்தை என் நண்பர்கள் தான் தயாரித்துள்ளனர், என் மீதான நம்பிக்கை மட்டும் தான் காரணம் அவர்களுக்கு நன்றி. நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர், எல்லோரும் கதையை நம்பி மட்டுமே வந்துள்ளனர். எல்லோரும் அருமையாக நடித்துள்ளனர். ‘யுவர்ஸ் ஷேம் புலி’ எனத்தொடர் எடுத்தேன் அது ஏற்படுத்திய எதிர்வினைகளைத்தான் இந்தப்படமும் ஏற்படுத்தும் என நம்புகிறேன். தப்பான கருத்தை சொல்லிவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமுடன் வேலை பார்த்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.

இப்படத்தில் கலையரசன், 96 பட ஆதித்யா பாஸ்கர், மற்றும் கௌரி கிஷன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், திட்டம் இரண்டு பட ஹீரோ சுபாஷ், சோபியா முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
சதீஷ் ரகுநாதன்- வான் ஆகியோர் இசையமைக்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார் முத்தையன் எடிட்டிங் பணியை மேற்கொண்டு இருக்கிறார்.

மார்ச் 29 ஆம் தேதி ‘ஹாட்ஸ்பாட்’ திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘சிக்ஸர் எண்டெர்டைன்மெண்ட்’ பேனரில் தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன் வெளியீடுகிறார்.