Take a fresh look at your lifestyle.

கார்த்தி , அரவிந்தசாமி உள்ளிட்ட ‘மெய்யழகன்’ படக்குழுவினருக்கு 70-ஆண்டு பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத் ‘தினரின் சால்வை மரியாதை !!

51

2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது.. கதாநாயகனாக கார்த்தி, முக்கிய வேடத்தில் அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்க, தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில். நடித்துள்ளார்.

படம் வெளியான நாளிலிருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியும் கூட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் குறையவில்லை. இதையடுத்து , ‘மெய்யழகன்’ படக்குழுவினர் இதன் வெற்றி விழாவை நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக கொண்டாடினார். இந்த நிகழ்வு நேற்று முன்தினம் 05-10-2024 சனிக்கிழமை மாலை சென்னை ,’ கிரீன் பார்க் ஹோட்டலி’ல் நடைபெற்றது.

இந்நிகழ்வில், ‘மெய்யழகன்’ படக்குழுவினர் அனைவரும் பேசி முடித்து அந்த நன்றி நவிழ்தல் மற்றும் வெற்றி விழா நிறைவுரும் வேளையில் ., ‘மெய்யழகன்’ பட பெருவெற்றிக்கு காரணமான பேரன்பு மிக்க நடிகர்கள் கார்த்தி, அர்விந்த்சாமி, தயாரிப்பாளர் 2d -ராஜசேகர், இயக்குனர் பிரேம்குமார் , வினியோகஸ்தர் ‘சக்தி ஃபிலிம் பேக்டரி’ சக்திவேலன் ஆகியோரை கௌரவிக்கும் விதமாக அவர்கள் ஐந்து பேருக்கும் 70-ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத் ‘தின் சார்பில் கெளரவ தலைவர் ‘கலைமாமணி’ நெல்லை சுந்தர்ராஜன் ,தலைவர் D.R. பாலேஷ்வர் , செயலாளர் R.S. கார்த்திக் @ கார்த்திகேயன் , துணைத்தலைவர் ‘கலைமாமணி’ மணவை பொன் மாணிக்கம், இணை செயலாளர் மதிஒளிகுமார் , செயற்குழு உறுப்பினர் Kural TV -மோகன் உறுப்பினர் itamil -பாலா உள்ளிட்டோர் அழகிய கைத்தறி துண்டுகளை அணிவித்து மகிழ்ந்தனர்.

அது மட்டுமின்றி , “உறவுகளின் உன்னதம் போற்றியதில் மெய்யாலுமே மெய்யழகனாக மெய் சிலிர்க்க வைத்த ‘மெய்யழகன் ‘ படத்தை தயாரித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தந்தமைக்காக ” இத்திரைப்படத்தின் மேலும் , இரு தயாரிப்பாளர்களான நடிகர் சூர்யா – ஜோதிகா தம்பதியினருக்கான (தவிர்க்க முடியாத சூழலால் அவர்களால் , இவ்விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை… ) சால்வையையும் நடிகர் கார்த்தியிடம் தந்து அவரது அண்ணன் – அண்ணியிடம் சேர்த்து விடும்படி மேற்படி , ‘ பாரம்பரிய ‘சினிமா பத்திரிகையாளர் சங்க ‘ செயலாளர் திரு. ஆர்.எஸ். கார்த்திக் @ கார்த்திகேயன் கேட்டுக் கொண்டது ‘மெய்யழகன்’ படக்குழுவினரை மெய்சிலிர்க்க வைத்தது !

‘மெய்யழகன் ‘ மாதிரியான நல்ல சினிமா தரும் திரையுலகினரை 70 – ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ‘சினிமா பத்திரிகையாளர் சங்க ‘மும் அதன் நிர்வாகிகளும் தொடர்ந்து இதுமாதிரி கௌரவித்து வருவதை , தரமான தமிழ் சினிமாக்களின் பிரபல வினியோகஸ்தர் ‘சக்தி ஃபிலிம் பேக்டரி’ சக்திவேலன் மேடையிலேயே ‘மைக்’ பிடித்து பாராட்டியதும், , ‘மெய்யழகன்’ படக்குழுவினரின் நன்றி நவிழ்தல் மற்றும் வெற்றி விழாவிற்கு மேலும் ,மகுடம் சேர்க்கும் விதத்தில் அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.