அமரன்’ பட நாயகர் சிவகார்த்திகேயனுக்கு.,
70-ஆண்டு பாரம்பரியம் மிக்க 'சினிமா பத்திரிகையாளர் சங்கம்' செய்த சிறப்பு !!"
அமர காவியமாக இந்திய இராணுவத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் வெளிவந்து ரசிகர்களின் ஆதரவில் வெற்றிக்கொடி நாட்டி வரும் ‘அமரன்’ பட சக்ஸஸ் விழாவில் அதன் கதாநாயகர் சிவகார்த்திகேயனுக்கு., 70 -ஆண்டு பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’
செய்த சிறப்பு மரியாதை திரையுலகில் பேச்சு பொருளாகியுள்ளது !
இந்திய இராணுவத்திற்கும் 2014-ல் தீவிரவாதிகளால் வீர மரணம் அடைந்த தமிழக இராணுவ வீரர் அமரர் . மேஜர் முகுந்த் வரதராஜனுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் நடிகர் கமல் அவர்களின் ‘ராஜ் கமல் பிலிம்ஸ் ‘ பேனரில் தீபாவளிக்கு வெளிவந்திருக்கும் ‘அமரன் ‘ திரைப் படத்தின் சக்ஸஸ் மீட் டில் அதன் கதாநாயகர் சிவகார்த்திகேயனுக்கு ., 70 ஆண்டு பாரம்பரியம் மிக்க சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பாக செயலாளர் R.S. கார்த்திக் @ கார்த்திகேயன் மற்றும் சங்கத்தின் துணைத் தலைவர் ‘கலைமாமணி’ மணவை பொன் மாணிக்கம் இருவரும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.