Take a fresh look at your lifestyle.

“‘கங்குவா’ உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழ்த் திரைப்படமாக நிச்சயம் அமையும் !”

சூர்யா ரசிகர்கள் நம்பிக்கை !!

123

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி இன்று , 14-11-2024 அன்று வெளியாகவுள்ள ‘கங்குவா’ தமிழ் சினிமாவின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜ மிகப்பெரிய பொருட்ச்செலவில் தயாரித்திருக்கும் இப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகள் படைக்கும் என்று இதுவரை படம் பார்த்த சினிமா சம்பந்தப்பட்டவர்கள் சொல்வதால் படக்குழு உற்சாகமடைந்துள்ளது.

இந்த நிலையில், படத்தின் டிக்கெட் முன்பதிவு இரு தினங்களுக்கு முன்பு தொடங்கி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா , மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்திய அளவில் டிக்கெட் முன்பதிவு படு வேகத்தில் நடந்துக் கொண்டிருப்பதால் ‘கங்குவா’ அலை தமிழகத்தை தாண்டி பிற மாநிலங்களிலும் அடித்துக் கொண்டிருப்பதே பத்தின் வெற்றியை பறை சாற்றுகிறது.

‘கங்குவா’ படத்தையும் பட வெற்றியையும் சூர்யா ரசிகர்கள்., தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சொன்னது போல், இரண்டாவது தீபாவளி பண்டிகையாக கொண்டாடவும் தயாராகி வருகிறார்கள்.

மேலும், படத்திற்கான விளம்பர பணிகளை தயாரிப்பு தரப்பு இதுவரை செய்திராத வகையில் மிகப்பெரிய அளவில் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. சூர்யா, பாபி தியோல் உள்ளிட்ட படக்குழுவினர் இந்தியாவை கடந்து துபாய் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று படத்தை விளம்பரம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதால், ‘கங்குவா’ உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழ்த் திரைப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .