Take a fresh look at your lifestyle.

“‘அலங்கு’ திரைப்படத்தின் ரிலீஸ் க்ளிம்பஸை வெளிட்டு., அப்படக்குழுவினரை வெகுவாக பாராட்டிய விஜய் !!

67

டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகள் தயாரிப்பில் உருவான ”அலங்கு” திரைப்படத்தின் Release Glimpse-ஐ வெளியிட்டார் ”விஜய்”

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களம் கொண்ட பல திரைப்படங்கள் வரும் வரிசையில் “அலங்கு “ திரைப்படமும் இணைந்து பல பாராட்டுகளையும், பல சினிமா நட்சத்திரங்களின் ஆதரவையும் பெற்று வருகிறது. அந்த வகையில் அலங்கு படக்குழுவினர் விஜய் அவர்களை காண சென்றுள்ளனர்.

படத்தின் முன்னோட்டத்தை பார்த்த விஜய் அவர்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டினார். மேலும் படத்தின் Release Glimpse-யும் வெளியிட்டுள்ளார்.

இத்திரைப்படத்தை DG FILM COMPANY சார்பில் D.சபரிஷ் , MAGNAS PRODUCTIONS சார்பில் சங்கமித்ரா சௌமியா அன்புமணி இருவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். SP சக்திவேல் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இத்திரைப்படத்தில் கதையின் நாயகனாக குணாநிதி நடித்திருக்கிறார். அவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத் , காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் நடித்துள்ளனர்.

அலங்கு திரைப்படத்தை, உலகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி B.சக்திவேலன், வருகின்ற டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.