BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ‘மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கி வரும், “ரெட்ட தல” படத்திற்காக நடிகர் தனுஷ் ஒரு பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
முன்னதாக நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்க, இந்த இருவர் கூட்டணியில் உருவாகும் “இட்லி கடை” படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் ரெட்ட தல படத்தில் இணைந்துள்ளது, யெஸ் , இப்படத்தில் … பாடல் ஒன்றை தனுஷ் பாடியுள்ளார் எனும் தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இசையமைப்பாளர் சாம் CS இசையில் உருவாகியுள்ள இந்த அழகான பாடலை தனுஷ் பாடியுள்ளார். இப்பாடலுக்கான படப்பிடிப்பு படக்குழு வெளிநாட்டில் பல இடங்களில் மிகபிரம்மாண்டமாக படமாக்கியுள்ளனர். விரைவில் இப்பாடல் லிரிகல் வீடியோ வடிவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டு முன்னணி நடிகர்கள் எந்த வித ஈகோவும் இல்லாமல், இணைந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
நடிகர் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தினை BTG Universal நிறுவனம் சார்பில் பாபி பாலச்சந்திரன், மிகப்பெரும் பொருட்செலவில், மிகப்பிரம்மாண்ட படைப்பாக தயாரிக்கிறார்.
தமிழ் திரையுலகில் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் தலைமை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய டாக்டர் M. மனோஜ் பெனோ, தற்போது BTG Universal நிறுவனத்தின் தலைமை திட்ட இயக்குநராக பொறுப்பேற்று திரைப்படங்களின் அனைத்து நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறார்.
இப்படத்தில் பங்கேற்றுள்ள
தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம் வருமாறு …
இயக்கம் – கிரிஷ் திருக்குமரன்
இசை – சாம் CS
ஒளிப்பதிவு – டிஜோ டாமி
எடிட்டர் – ஆண்டனி
ஸ்டண்ட் – PC ஸ்டண்ட்ஸ்
கலை இயக்கம் – அருண்சங்கர் துரை
உடை வடிவமைப்பு – கிருத்திகா சேகர்
பப்ளிசிட்டி டிசைனிங் – பிரதூல் NT
அருண் விஜய் , இதுவரை நடித்ததிலேயே பெரும் பிரமாண்ட படைப்பாக விரைவில் திரைக்கு வர இருக்கிறது ‘ரெட்ட தல’ .