Take a fresh look at your lifestyle.

ரெதான் – தி சினிமா பீப்பிள் இந்தர்குமார் தயாரிப்பில் சிவா கதாநாயகனாக நடிக்க – காமெடியனாக யோகி பாபு நடிப்பில் முத்துக்குமரன் இயக்கத்தில் “சலூன்”

316

‘குற்றம் 23’, ‘தடம்’ வெற்றிப்படங்களை தொடர்ந்து இந்தர்குமாரின் ரெதான் – தி சினிமா பீப்பிள் தயாரித்துள்ள படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’. எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இதனைத் தொடர்ந்து கதாநாயகனாக சிவா – காமெடியனாக யோகி பாபு நடிப்பில் ‘தர்மபிரபு’ வெற்றிப் படத்தை இயக்கிய முத்துக்குமரன் இயக்கத்தில் புதிய நகைச்சுவை படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறார் இந்தர்குமார்.

‘சலூன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் சிவா – யோகி பாபு இணைந்து நடிக்க கதாநாயகி மற்றும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.
‘சலூன்’ பின்னணியில் கடையின் முதலாளியாக சிவா, தொழிலாளியாக யோகி பாபு நடிக்கின்றனர்.

முழுக்க முழுக்க சரவெடி நகைச்சுவையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் துவங்கி கோடை விடுமுறையில் வெளிவருகிறது.
படக்குழுவினர் விவரம்:
தயாரிப்பு – இந்தர்குமார்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – முத்துக்குமரன்
ஒளிப்பதிவு – எஸ்.மணிகண்டன்
இசை – சாம்.சி.எஸ்
எடிட்டிங் – சான் லோகேஷ்
கலை – சி.எஸ்.பாலசந்தர்
பாடல்கள் – யுகபாரதி
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்