Take a fresh look at your lifestyle.

சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய தலைமுறையினரின் வாழ்வை சொல்லும் காதல் திரைப்படம் ‘2K லவ்ஸ்டோரி’ !

படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம் !!

24

‘City light pictures’ தயாரிப்பில் தமிழ் திரையுலக படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாக்கும் திரைப்படம் ‘2K லவ்ஸ்டோரி ‘. இப்படத்தின் படப்பிடிப்பு நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொள்ள எளிமையான முறையில் இரு தினங்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கியது.

தனது தனித்துவமான படைப்புகள் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற, இயக்குநர் சுசீந்திரன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ரொமான்ஸ் ஜானரில் இப்படத்தை இயக்குகிறார். 2K தலைமுறையின் காதல், நட்பு, என இன்றைய இளம் தலைமுறையின் வாழ்வை பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கவுள்ளார்.

வெட்டிங் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு புகைப்பட குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் நடக்கும் கதை என்பதால், இப்படத்தின் படப்பிடிப்பை கோவை மற்றும் சென்னையில் ., இப்படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் D. இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D.இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ‘City light pictures’ சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தை தயாரிக்கிறார்.

புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படம் பற்றிய மேலும் கூடுதல் தகவல்களை விரைவில் படக்குழுவினர் அறிவிக்க இருக்கிறார்கள்.

மற்றபடி ., இப்படத்தின் தொழில் நுட்ப குழு வில் இயக்கம் – சுசீந்திரன் , ஒளிப்பதிவு – V.S.ஆனந்தகிருஷ்ணன் ,இசை – டி.இமான், பாடல் வரிகள் – கார்த்திக் , நேதா , படத்தொகுப்பு – தியாகு ,கலை – சுரேஷ் பழனிவேலு , நடனம் – ஷோபி, பால்ராஜ்,
ஆடை வடிவமைப்பு – மீரா
போஸ்டர் வடிவமைப்பு – கார்த்திக் ,
தயாரிப்பு- விக்னேஷ் சுப்ரமணியன் என கோலிவுட்டின் முன்னணி கலைஞர்கள் பலர் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.