Take a fresh look at your lifestyle.

ராசா விக்ரம் இயக்கத்தில் , ‘காக்கா முட்டை’ சிறுவர்களுடன் 2-ரூபாய்‌ டாக்டர்‌. ஜெயச்சந்திரன்‌

180

ராசா விக்ரம் இயக்கத்தில் , ‘காக்கா முட்டை’ சிறுவர்களுடன் 2-ரூபாய்‌ டாக்டர்‌. ஜெயச்சந்திரன்‌ ஒரு முக்கிய வேடத்தில்‌ நடித்துள்ள புது வேதம் பட ஆடியோ வெளியீட்டு விழா !

திருமாவளவன் எம் பி, இயக்குனர்கள் கே எஸ் ரவிக்குமார், வி சேகர்… பங்கேற்பு !!

விட்டல்‌ மூவிஸ்‌ தயாரித்து விரைவில்‌ திரைக்கு வரவிருக்கும் திரைப்படம்‌ ‘புதுவேதம்‌’.

இந்தப்‌ படத்தின்‌ கதையைப்‌ பற்றி இயக்குனர்‌ ராசாவிக்ரம்‌ கூறும்‌ போது,”சமீப காலமாக ஜாதியைப்‌ பற்றிப்‌ பேசும்‌ படங்கள்‌ அதிகமாக வருகின்றன. அதில்‌ சில படங்கள்‌
வெற்றியும்‌ பெறுகின்றன. ‘புதுவேதம்‌’ படத்தின்‌ கதை கதைக்களம்‌ வித்தியாசமானது…
சற்றே பிற திரைப்படங்களில் இருந்து
மாறுபட்டது…

பிறப்பால்‌ உயர்ந்தவர்‌ தாழ்ந்தவர்‌ என்பது நமது தமிழ்க்‌ கலாச்சாரத்தில்‌ கிடையாது.
“பிறப்பொக்கும்‌ எல்லா உயிர்க்கும்‌…” என்பது தான்‌ தமிழர்களின்‌ வேதம்‌. பல்வேறு காரணங்களால்‌ பெற்றவர்களால்‌ கைவிடப்படும்‌ அனாதை சிறுவர்கள்‌ சிலர்‌ தங்கள்‌ வயிற்றுப்‌ பிழைப்புக்காக, புறநகரில்‌ கொட்டப்படும்‌ கழிவுகளில்‌ உள்ள குப்பைகளைப்‌ பொறுக்கி, விற்று அதில் வரும் வருமானத்தில் தின்று ., அங்கேயே சிறு சிறு குடிசைகள்‌ போட்டு தங்களின்‌ வாழ்வை அமைத்துக்‌ கொள்கிறார்கள்‌.
இவர்கள்,
சமூகத்தால்‌ புறக்கணிக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு வாழ்கிறார்கள்‌. இவர்களின்‌ உழைப்பை சில பெரிய மனிதர்கள்‌ பயன்‌படுத்திக்‌கொண்டு தங்கள்‌ வாழ்வை வளப்படுத்தி கொள்கிறார்கள்‌ .

ஆதாயத்துக்காக இவர்கள்‌ செய்யும்‌ காரியம்‌ மக்களை பாதித்து, பலர்‌ இறக்கவும்‌
நேரிடுகிறது . அதனால்‌ அரசு குப்பையை எடுத்து விற்க தடை விதிக்கிறது.

பிறந்தது முதலே குப்பை மேட்டிலேயே வசிக்கும்‌ சிறுவர்கள்‌ இதனால் கடுமையாக. பாதிக்கப்படுகிறார்கள்‌. இவர்கள்‌ மட்டும்‌ பெற்றோர்களால்‌ கை விடப்படாமல்‌ பாதுகாப்பாக
இருந்திருந்தால்‌ படித்து பட்டம்‌ பெற்று பொறுப்பான வேலைக்கு சென்றிருப்பார்கள்‌ என்பதை யதார்த்தமாக சொல்வது தான்‌ புதுவேதத்தின்‌ கதை .

இதில்‌ ‘காக்கா முட்டை’ சிறுவர்களான விக்னேஷ்‌, ரமேஷ்‌ மற்றும் வருணிகா, சஞ்சனா, இமான்‌ அண்ணாச்சி , சிசர்‌ மனோகர் ஆகியோருடன்‌ 2 ரூபாய்‌ டாக்டர்‌ ஜெயச்சந்திரன்‌ ஒரு முக்கிய
வேடத்தில்‌ நடித்துள்ளர்‌. ரபி தேவேந்திரன்‌ இசையில்‌ இமான்‌ அண்ணாச்சி சொந்தக்‌
குரலில்‌ பாடியுள்ளார்‌. இணைத்‌ தயாரிப்பு மஞ்சுநாத்‌ புகழ்‌, எழுதி இயக்கியவர்‌ ராசா விக்ரம்‌.

இப்படி பல்வேறு சிறப்பகளைக்கொண்ட
‘புதுவேதம்’ படத்தின் டிரெய்லர், ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் சமீபமாக நடந்தது. இப்பட பி ஆர் ஒ நெல்லை சுந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார். பின்னர் விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் முறையே நடிகர் இமான் அண்ணாச்சி ,திரைப்பட
இயக்குனர்கள் கே. எஸ். ரவிகுமார், வி.சேகர் மற்றும், தொல்.திருமாவளவன் M.P உள்ளிட்டோர் ‘புது வேதம்’ திரைப்படம் குறித்து வாழ்த்தி பேசி அப்படத்தின் ஆடியோ மற்றும் டிரையிலரையும் வெளியிட்டனர்.